இலங்கை இறுதிப் போரில் நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பாகத் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்குறித்து இலங்கை அரசு விரிவாக ஆய்வு செய்யவேண்டும் என்று இந்திய அரசு கோரியுள்ளது. இலங்கைப் போரின் இறுதிக்கட்ட சம்பவங்கள் தொடர்பாக சனல் 4 தொலைக் காட்சியில் வெளியான காட்சிகள் தொடர்பாகவும் அந்தப் போர் தொடர்பாக ஐ.நா. தலைமைச் செயலரால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கை தொடர்பாகவும் இந்தியா முதல் முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளது.
சனல் 4 வெளியிட்ட இறுதிப்போர் தொடர்பான காட்சிகள் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விஸ்ணுபிரகாஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கைப் போரின் இறுதிக்கட்டத்தில் நடந்த சம்பவங்கள் குறித்து தெளிவில்லாத நிலையுள்ளது. இதுகுறித்து இலங்கை இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய வேண்டும் .அது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் குறித்துஆராயப்படவேண்டும்.
இந்தியாவைப் பொறுத்தவரை வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ்பேசும் சிறுபான்மையினரின் நலன் மற்றும் நல்வாழ்வில் அக்கறை கொண்டுள்ளது. அவர்களுக்கான மறுவாழ்வு நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் விரைவாக செயல்படுத்த வேண்டும் என இலங்கை அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
போரின் இறுதிக்கட்டத்தில் நடந்ததாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா நிபுணர் குழுவின் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா வெளியுறவு அமைச்சகம். அந்த அறிக்கை தொடாபாக இன்னும் பல கேள்விகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால் அது என்ன கேள்விகள் என்பதை அந்த அறிக்கை தெளிவுபடுத்தவில்லை.
ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையைப் பொறுத்தவரை இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்தியா வந்திருந்த நேரத்திலும் கடந்த மாதம் கொழும்பில் நடந்த ஒரு மாநாட்டின் போதும் இலங்கை அரசின் கருத்துக்களை இந்தியா கேட்டறிந் திருப்பதாக விஸ்ணு பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மெளனம் கலைந்தது - போர்க்குற்றம் குறித்த விசாரனை அவசியம்!
பதிந்தவர்:
Anonymous
16 July 2011



0 Responses to இந்தியாவின் மெளனம் கலைந்தது - போர்க்குற்றம் குறித்த விசாரனை அவசியம்!