முள்ளிவாய்க்கால் நினைவாக சோழன் ஆண்ட தஞ்சையில் ஈகிகள் முற்றம் என்ற நினைவகத்தை ஐயா நெடுமாறன் அவர்களின் உலகத் தமிழர் பேரமைப்பு நிறுவி வருகிறது.
கொல்லப்பட்ட தமிழர்களுக்காக நுற்பமான சிற்பக்கலையோடு இந்த ஈகிகள் முற்றம் நிறுவப்பட்டு வரும் நிலையில், அதற்காக பணம் சேர்ப்பதாகக் கூறி ஒரு இணையம் பேப் பால்(paypal) மூலம் காசு சேர்த்துள்ளது.
ஆனால் அவ்வாறு தாம் காசைச் சேர்க்கச் சொல்லவில்லை என்றும், இவ்வாறு சேர்க்கப்பட்ட காசு தமக்கு கிடைக்கவில்லை என்றும் ஐயா நெடுமாறன் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இவ்வாறு உலகத் தமிழர் பேரமைப்பிடம் முன் அனுமதி பெறாமல், அவர்களுக்கே தெரியாமல் ஈகிகள் முற்றத்துக்கு காசுசேர்த்த மோசடிப் பேர்வழிகள் யார் என்று தேடினால் கிடைத்த விடை லங்கா சிறி குழுமமும் அதன் தமிழ் வின் என்ற செய்தி இணையமும் ஆகும்.
சுவிஸில் இருந்து திறக்கப்பட்ட ஒரு அனாமதேய பேப் பால் கணக்கு மூலம் மக்களிடம் பணம் பெறப்பட்டுள்ளது. இக் காசு எங்கு சென்றது என்று தெரியவில்லை!
மேலும் வாசிக்க...
ஐயா நெடுமாறன் பெயரைச் சொல்லி பணத்தைக் கொள்ளையடிக்கும் இணையம் எது?
பதிந்தவர்:
ஈழப்பிரியா
08 July 2011



0 Responses to ஐயா நெடுமாறன் பெயரைச் சொல்லி பணத்தைக் கொள்ளையடிக்கும் இணையம் எது?