தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான தாக்குதல்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் வேறுவிதமான தாக்குதல்களை தொடர்ந்துள்ளனர். பொருளாதார ரீதியாக எம்மைப் பலமிழக்கச் செய்ய முற்படுகிறார்கள் என்று ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அங்கு அவர் உரையாற்றுகையில்:
இலங்கை மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தவில்லை. அது உதவி செய்வதற்கே முன்வந்துள்ளது. இந்தியாவுடன் இணைந்து கூட்டறிக்கையே வெளியிடப்பட்டது. இது உடன்பாடு அல்ல. இலங்கையின் தேசியப் பிரச்சினைக்கு உதவவே இந்தியா விரும்புகிறது.
தேசிய ரீதியான ஒரு தீர்வையே காண நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளோம். இது காலத்தை இழுத்தடிக்கும் வேலை என சிலர் எண்ணலாம்.
ஆனால் உண்மையில் இது காலத்தை இழுத்தடிக்கும் வேலையல்ல. தீர்வை மிக விரைவாக பெற்றுக் கொடுப்பதே எமது நோக்கம் என்று பீரிஸ் தெரிவித்தார்.
தற்போது விடுதலைப் புலிகளின் இராணுவ ரீதியான தாக்குதல்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் வேறுவிதமான தாக்குதல்களை தொடர்ந்துள்ளனர். பொருளாதார ரீதியாக எம்மைப் பலமிழக்கச் செய்ய முற்படுகிறார்கள்.
இலங்கைக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை தடுக்க முற்படுகின்றனர் என்றார்.
சூடானுடன் இலங்கையைச் சிலர் ஒப்பிட முற்படுகின்றனர். ஆனால் சூடானுடன் இலங்கையை ஒப்பிட முடியாது.
இந்தியா தொடர்பாக குரோத மனப்பான்மையுடன் பார்க்க வேண்டாம். இந்தியாவை ஒதுக்கி விட்டு இலங்கையினால் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டமுடியாது.
இந்தியா ஊடாகத் தான் எமது இலக்கை அடைய முடியும் என்றும் வெளிவிவகார அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
விடுதலைப் புலிகள் பொருளாதார ரீதியாக எம்மை பலமிழக்கச் செய்கிறார்கள்: பீரிஸ்
பதிந்தவர்:
தம்பியன்
09 July 2011



0 Responses to விடுதலைப் புலிகள் பொருளாதார ரீதியாக எம்மை பலமிழக்கச் செய்கிறார்கள்: பீரிஸ்