இனவாத சிறீலங்கா அரசால் சிங்கள மக்களிடையே இனவாத கொள்கைகளை பரப்பி இன அழிப்பிற்கான கலவரங்களை உருவாக்கி தமிழினத்திற்கெதிரான வன்முறைகளையும் படுகொலைகளையும் நேரடியாக அரச உதவியுடன் கட்டவிழ்த்து விடப்பட்ட நாட்கள் இவை.
3000 ற்கு மேற்பட்ட மக்கள் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்படனர், கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டனர். பலர் உயிருடன் எரிக்கப்பட்டனர், பெண்கள் பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
18,000 ற்கு மேற்பட்ட தமிழ் மக்களின் உடைமைகள் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டன. இலங்கைத்தீவின் தென் பகுதியில் இருந்து பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் விரட்டியடிக்கப்பட்டனர், 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் இலங்கையை விட்டு ஏனைய நாடுகளில் தஞ்சம் புக வேண்டிய சுழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இக்கொடூர நிகழ்வுகள் உலகையே உலுக்கி எடுத்தன. ஈழத்தமிழர் வாழ்வில் கறுப்பு ஜூலைகள் தினமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆண்டுகள் கழிந்தும் தமிழ் இனத்திற்கெதிரான படுகொலைகள் நின்றுவிடவில்லை. இவை தொடர்ச்சியான இன அழிப்பின் சாட்சியங்களாகும்.
சிறீலங்கா இனவாத அரசின் திட்டமிட்ட இன அழிப்பிலே உரிமைகளை, உறவுகளை, உடமைகளை பறிகொடுத்து நிற்கும் தமிழினத்தின் விடுதலைக்கான போரினை முன்னெடுப்போம் உறவுகளே! வலி சுமந்த இந்த நாட்களை தொடரும் தமிழினப் படுகொலைக்கெதிராக குரல் கொடுக்கும் நாட்களாக மாற்றுவோம்.
பிரித்தானிய தமிழர் பேரவையானது இதற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது. இந் நிகழ்வில் ஆக்கப்பூர்வமாக பங்கெடுக்க விரும்புவோர் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் தொண்டர்களாக இந் நிகழ்வில் பணியாற்ற விரும்புவோர் எமது அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு தங்களது விபரங்களை பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொள்கின்றோம்.
இந் நிகழ்விற்கு அனைத்து மக்களையும் மற்றும் நிறுவனங்கள், அமைப்புகள், ஊடகங்கள் என்பன ஆதரவை வழங்கி உணர்வுபூர்வமாக கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கின்றோம். இதற்கான கருத்துக்களையும் தங்களாலான பங்களிப்பினையும் எதிர்பார்கின்றோம்.
கறுப்பு ஜூலை வலிசுமந்த நினைவு நிகழ்வு பற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.
பிரித்தானிய தமிழர் பேரவை



0 Responses to கறுப்பு ஜூலை - ஈழத் தமிழர் வரலாற்றின் வலி சுமந்த நாட்கள்