மட்டக்களப்பில் கருணாகுழுவுக்குள் கடும் மோதல் உருவாகி உள்ளதாகவும், அதன் உச்சக்கட்டமாக நேற்று முன்னர் கருணாவுடன் இணைந்து செயற்பட்ட யூலியன் என்பவரை கருணா தலைமையில் சென்ற குழு கடுமையாக தாக்கியுள்ளதாகவும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மட்டக்களப்பு கரடியனாற்றில் கல்வாடி வைத்திருக்கும் (கற்களை உடைத்து தென்னிலங்கைக்கு ஏற்றுமதி செய்வது) யூலியன் என்பவரை பிரதியமைச்சராக இருக்கும் கருணாவும் அவருடன் சென்ற வீரா, மற்றும் ரவி என்பவர்கள் கடுமையாக தாக்கியதாகவும், இதனையடுத்து யூலியன் என்பவர் கரடியனாறு காவல்நிலையத்திற்கு சென்று சரணடைந்த போது அங்கும் சென்ற கருணா குழு அவர்களை சரமாரியாகத் தாக்கியதாகவும் அறிகிறது.
இதேவேளை கிரான் சந்தியில் கடைவைத்திருக்கும் செல்வா என்பவரையும் கருணா நேற்றுமுன்தினம் கடுமையாக தாக்கியுள்ளார். குறிப்பிட்ட நபர் கருணாவுக்கு நெருங்கிய ஆள் ஒருவரிடம் கருணா தமிழ் மக்களுக்கு விடுதலைவேண்டும் எனச் செயப்பட்டு, இப்போது அரசுடன் சேர்ந்து இயங்குகிறாரே எனக் குறைப்பட்டுள்ளார். அதனை அந் நபர் கருணாவுக்குச் சொல்லியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கருணாவின் அண்மைக்கால செயற்பாடுகளும், மகிந்த அரசுக்கு துதிபாடித்திருவதும் அவரின் சொந்த ஊரான கிரானிலேயே கடும் எதிர்ப்பும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கவிடையமாகும். இனிமேல் தன்னைப்பற்றி கிரானில் யாரும் பேசக்கூடாது என கருணா எச்சரித்து சென்றதாகவும் கிரான் மக்கள் தெரிவிக்கின்றனர் என அதிர்வின் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
அதிர்வு



0 Responses to ஒட்டுக்குழுவான கருணா குழுவுக்குள் மட்டு. கிரானில் கோஷ்டிமோதல்!