Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். உள்ளுராட்சி சபைத் தேர்தலில் அதிகாரம் மாறினால் சங்கிலியன் சிலையை உடைக்க முடியாது. ஆகவேதான் தேர்தலுக்கு முன்னரே அச்சிலை உடைக்கப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தேர்தலில் மக்களின் வாக்குகளை கேட்போர் அதிகமாக தேர்தலுக்கு பின்னரே இத்தகைய செயலை செய்வதுண்டு. ஆனால் சிறீலங்கா ஆட்சியாளர் தேர்தலுக்கு முன் சங்கிலியன் சிலையை உடைத்தமை அதிகாரம் மாறப்போவதைக் காட்டுகிறது. தற்போது யாழில் பெருகும் தமிழின உணர்வை அரசு சரியாக அளவிட்டுள்ளது. இது குறத்த இன்றைய செய்தி :

யாழ்ப்பாணத்தை ஆண்ட கடைசி மன்னன் சங்கிலியனின் உருவச் சிலையை புதுப்பொலிவுடன் உருவாக்குவதற்காக பழைய சிலை மாநகரசபையால் அகற்றப்பட்டுள்ளதுடன் அப்பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.

யாழ். மாநகரசபையின் ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியினர் இறுதியாக நடைபெற்ற மாநகர பொதுக்கூட்டத்தில் முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டுள்ள சங்கிலிய மன்னனின் சிலையை உடைத்து புதிய சிலையை வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முவைத்தனர். இதற்கு எதிரணி உறுப்பினர் விந்தன் சிலையை அகற்றாது புனரமைப்பு செய்யுமாறு கோரியுள்ளார். எனினும் ஆளும் தரப்பால் இது முழுமையாக புனரமைக்க வேண்டும் என்ற பிரேரணை நிறைவேற்றப்பட்டது.

இதனடிப்படையில் மாநகரசபையால் சங்கிலியனின் சிலை அகற்றப்பட்டு சிலை இருந்த பகுதி முற்றுமுழுதாக மறைக்கப்பட்டுள்ளது.

0 Responses to தேர்தலுக்கு முன் சிலையை உடைத்த மர்மம் என்ன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com