இலங்கைத் தமிழர்கள் படுகொலை குறித்த சி.டி.க்களை மதிமுகவினர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர்.
இலங்கையில் இறுதி கட்டப் போரில் சிங்கள ராணுவம் லட்சக்கணக்கான தமிழர்களை ஈவு, இரக்கமின்றி கொடூரமான முறையில் கொன்று குவித்தது. சரண் அடைந்த விடுதலைப் புலிகளை நிர்வாணமாக்கி அவர்கள் கண்களைக் கட்டி, கைகளை பின்னால் கட்டி சித்ரவதை செய்து கொன்றது.
மேலும் ஏராளமான தமிழ் பெண்களை மானபங்கப்படுத்தி சித்ரவதை செய்து கொன்றது. இலங்கை ராணுவத்தின் இந்த கொடூரத்தை எல்லாம் இங்கிலாந்தின் சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பி உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இலங்கையில் போர்க்குற்றம் நடந்துள்ளது என்று ஐ.நா. நிபுணர் குழுவும் அறிக்கை சமர்பித்துள்ளது.
இதன் அடிப்படையில் இலங்கை கொலைக்களம் பற்றிய சி.டி.யை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தயாரித்து வெளியிட்டார்.
இலங்கையில் நடந்த கொடூரத்தை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் இந்த சி.டி.க்களை மதிமுகவினர் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்த சி.டி.க்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று திருச்சி நீதிமன்ற வளாகம் முன்பு நடந்தது. இதற்கு மதிமுக மாநில சட்டத்துறை செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார்.
நேற்று மாலை காந்தி மார்க்கெட் பகுதியிலும் சி.டி.க்கள் வழங்கப்பட்டது. இன்று கல்லூரி மாணவர்களுக்கு இந்த சி.டி.க்கள் வழங்கப்படவிருக்கின்றது.



0 Responses to இலங்கை கொலைக்கள சி.டி.க்களை மக்களுக்கு இலவசமாக வழங்கும் மதிமுக