சீனா, ரஷ்யா உட்பட உலகெங்கும் உள்ள நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு, இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் விளக்கி, தமிழருக்கு ஆதரவு திரட்டும் பணியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்துள்ளது. இதுவரை 49 நாடுகளுக்கு உண்மையை விளக்கி கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.
இலங்கையில் நிகழ்த்தப்பட்டது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் அல்ல. அது மனித குலத்துக்கு எதிரான போர் என்பதை உலகெங்கும் உள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு விளக்கி வருகிறோம் என்று உதயனுக்கு வழங்கிய விசேட பேட்டியில் தெரிவித்தார் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழக மாநில செயலாளர் தா.பாண்டியன்.இலங்கையில் நடை பெற்ற போரின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை இந்தியாவில் உள்ள எல்லா மாநில மக்களுக்கும் விளக்கும் பணியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆரம்பித்துள்ளது. அதன் ஒரு கட்டமாக கடந்த 8ஆம் திகதி இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தரும் தினம் என்று பிரகடனப்படுத்தி இந்தியா முழுவதும் நிகழ்வுகளை நடத்தியது கட்சி.
ஆந்திரா, தமிழகம், கேரளா உட்பட இந்தியாவின் பல மாநிலங்களிலும் இந்தத் தினம் கடைப் பிடிக்கப்பட்டது. கட்சி யின் இந்தச் செயற்றிட் டத்தின் ஒரு பகுதியாக இலங்கைப் போரின் உண்மையை உலகக்கம் யூனிஸ்டுகளுக்கு விளக்கும் திட்டத்தையும் அது ஆரம்பித்துள்ளது.
சென்னையில் உள்ள அலுவலகத்தில் வைத்து உதயன் பிரதிநிதிக்கு வழங்கிய பேட்டியில் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் மேலும் தெரிவித்தாவது:
உண்மையான தகவல்கள் உலக கம்யூனிஸ்டுகளுக்குப் போய்ச் சேரவில்லை. நடந்தது பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று இலங்கை அரசு செய்த பிரசாரத்தின் அடிப்படையிலேயே பல கம்யூனிஸ்ட் அரசுகளும் கட்சிகளும் இதுவரை முடிவுகளை எடுத்து வந்தன. இப்பொழுது அந்தந்த நாட்டு கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு உண்மை என்ன என்பதை நாம் எடுத்து விளக்கி வருகிறோம். பயங்கரவாதத்துக்கு எதிரான போரிலா லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டும் மற்றும் பல லட்சம் மக்கள் அகதிகளாக்கப்பட்டும் உள்ளார்கள் என்ற யதார்த்தத்தை அவர்களுக்குப் புரிய வைக்கிறோம்.
இது தொடர்பான தரவுகள், ஆவணங்களுடன் 49 நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நாம் கடிதங்களை அனுப்பி வைத்துள்ளோம். அவற்றில் 10 நாடுகளில் இருந்து, இப்போதுதான் உண்மை தெரிந்தது. உங்கள் முயற்சியை வரவேற்கிறோம் என்று பதில் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் 5 நாடுகளில் இருந்து எமது கடிதம் கிடைத்து விட்டது என்ற பதில் அனுப்பப்பட்டுள்ளது. நாங்கள் எமது கடிதத்தை ஆங்கிலத்திலேயே அனுப்பி வைத்தோம் என்பதால், அவற்றை அந்தந்த நாட்டு மொழிகளில் பெயர்த்து எடுப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்தால் ஏனைய நாடுகளிடம் இருந்து பதில் கிடைப்பது தாமதமாகிறது.
எப்படி இருந்த போதும், உலகிலுள்ள முற்போக்கு சக்திகள் அனைத்தையும் ஒன்று திரட்டி ஈழத் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கப் போராடுவோம். பாலஸ்தீனப் பிரச்சினையில் செயற்பட்டது போன்ற அதேயளவு வேகத்துடனும் உணர்வுடனும் உலக முற்போக்கு சக்திகள் அனைத்தையும் நாம் அணி திரட்டுவோம்.இந்த முயற்சியில் நாம் வெற்றிபெறுவோம் என்று திடமாக நம்புகின்றேன். குறிப்பிட்டளவு முன்னேறி இருக்கிறோம் என்றும் கருதுகின்றேன். இப்படி தனது பேட்டியில் தா. பாண்டியன் தெரிவித்தார்.



சின கம்யூனிஸ்ட் இலங்கைல் உள்ள சில துறைகளை தான் வசபடுதி கொண்டனர் தமிழர்கள் பகுதில் உள்ள திருகோணமலை துறைமுகத்தை சின கம்யூனிஸ்ட் இடம் கோடுகள் ஈழா தமிழர்களுக்கு அதரவு கொடுப்பார்கள் ஏன் இலங்கை கம்யூனிஸ்ட் கச்சிடம் அதரவு கேளுங்கள் ශ්රී ලංකාවේ කොමියුනිස්ට් පක්ෂය இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி)http://www.communistpartyofsrilanka.org/