இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து இளைஞர் அமைப்பை சேர்ந்தவர்கள் சென்னை நுங்கம்பாக்கதில் உள்ள இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினார்கள்.
இப்போராட்டத்தின் போது, ‘’ இழுத்து மூடு.. இழுத்து மூடு.... இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகத்தை இழுத்து மூடு.. இழுத்து மூடு.....’’ என்று முழங்கிக்கொண்டே சாலையில் அமர்ந்தனர்.
இதனால் போக்குவரத்து தடைபட்டது. 30 நிமிட நேரத்திற்கு நடந்த இந்த சாலை மறியலையடுத்து அவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அனைவரும் சென்னை நுங்கம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மறியல் குறித்து கேட்டதற்கு, தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு இணங்க,
போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியும் தாங்கள் மறியலில் ஈடுபட்டதாகத் தெரிவித்தனர்.



0 Responses to இலங்கை ஏர்லைன்ஸ் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்