யாழ்ப்பாணத்தில் கடைசித் தமிழ் மன்னனான சங்கிலியனுக்கு முத்திரைச் சந்தியில் வைக்கப்பட்டிருந்த சிலை யாழ். மாநகர சபையால் இடித்தழிக்கப்பட்டது.
சிலையைச் சுற்றி நேற்று பாரிய மறைப்புகள் ஏற்படுத்தப்பட்டபின்னரே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பலாம் என்பதால் பொலிஸ் மற்றும் இராணுவ பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இப்போதுள்ள சிலையை இடித்து அகற்றிவிட்டு அந்த இடத்தில் இந்தியச் சிற்பியின் கைவண்ணத்தில் புதிய அழகிய சிலை நிறுவப்படும் என்று யாழ்.மாநகரசபை ஆணையாளர் தெரிவித்துள்ளதாக யாழ். தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய சிலை அமைப்பதற்காக ஒன்றரை லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் -யாழ்.மாநகரசபையின் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக சங்கிலிய மன்னனது நினைவுத் தூபியை ஆரம்பத்தில் இருந்தது போல மீள நிர்மாணிப்பதாக முடிவெடுக்கப்பட்டதாகவும் - தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது, சங்கிலிய மன்னனது சிலை முற்றாக இடித்தழிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தியச் சிற்பியான புருசோத்தமன் அந்தச் சிலையை மீள உயிரோட்டமுள்ளதாக நிர்மாணிக்க உள்ளார் எனவும் -
மீள அமைக்கப்படும் இந்தச் சிலையில் சங்கிலிய மன்னனின் வாளேந்தும் போக்கில் சிறு மாறுதல் செய்யப்படவுள்ளதாகவும் - மாநகர சபைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது தமிழ் மன்னான சங்கிலியன் வாள் ஏந்திய நிலையில் இருப்பதாகவும்இ இது தென்னிலங்கையில் இருந்து வரும் அமைச்சர்களுக்கும்இ சிங்கள மக்களுக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்த மாநகர ஆணையாளர் வாள் ஏந்தாத சாதாரண சங்கிலி மன்னனின் சிலை நிறுவப்படும் என தெரிவித்தார்.
யாழ். இராணுவ கட்டளைத்தளபதி ஹத்துருசிங்காவின் உத்தரவின் பேரில் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணம் வாள் ஏந்தும் சங்கிலி மன்னனின் சிலையை இடிக்குமாறு உத்தரவிட்டதாக யாழ் மாநகரசபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை யாழ் நகரில் இருக்கும் மந்திரி மனை என அழைக்கப்படும் வரலாற்று நினைவுச்சின்னத்தையும் இடிப்பதற்கு யாழ் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சங்கிலி மன்னனின் மந்திரி வாழ்ந்ததாக கூறப்படும் சிற்ப வேலைப்பாடு கொண்ட இந்த இல்லத்திற்கும் தற்போது ஆபத்து வந்துள்ளதாக யாழ். மக்கள் கருதுகின்றனர்.
கடந்தவாரம் நெல்லியடியில் வைத்து வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, தமிழர்களின் யுத்த நினைவுச் சின்னங்களை அழிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என பகிரங்கமாகத் தகவல் வெளியிட்டபின்னர், இந்த நடவடிக்கை இடம்பெறுவதால் பொதுமக்கள் இது குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.







Those who are supporting for war crime what else they can do.If you allow them to continue like this they will ask all the Tamils should work as domestic servant to Sinhalese.