இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்சே கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது.
இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் இப்பணியின் ஒருபகுதியாக 25.07.2011 அன்று திரைப்பட கலைஞர்கள் இயக்குனர் மணிவண்ணன், செல்வமணி, ரோஜா, நடிகர் சத்தியராஜ் ஆகியோரிடம் கையொப்பங்கள் பெறப்பட்டன.
போர்க்குற்றவாளி ராஜபச்சவை கூண்டில் நிறுத்த கையெழுத்து இயக்கம்: திரைப்பட கலைஞர்கள் கையெழுத்து
பதிந்தவர்:
ஈழப்பிரியா
26 July 2011



இளமாறன் தமிழ்நாடு
இந்த செய்தி மேலே உள்ள கட்டுரைக்கு சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதன் மூலம் நான் தமிழர்களை வேண்டி கொள்வது இது தான்.
தமிழர்களே தயவு செய்து இந்த இணைத்தளத்துக்கு சென்று தமிழ் ஈழத்துக்கான வாக்குபதிவு நடத்த உங்கள் கையொப்பத்தை இடவும், உங்கள் நண்பர்களிடமும் கூறுங்கள், நம்மால் முடிந்த அளவு தமிழ் ஈழ போரட்டத்திற்க்கு இது போன்ற சிறிய உதவிகளை செய்யலாம் http://www.tamilsforobama.com/Referendum2011/english.asp