Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகளின் மாபெரும் கையொப்ப இயக்கம் தொடங்கும் நிகழ்ச்சி 12.07.2011 அன்று சென்னையில் தொடங்கியது.

இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தொடங்கி வைத்தார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

25.07.2011 அன்று திரைத்துறையை சார்ந்த சத்தியராஜ், மணிவண்ணன், ஆர்.கே.செல்வமணி, ரோஜா, அறிவுமதி உள்ளிட்ட பலரிடம் கையெழுத்து வாங்கியுள்ளனர்.

இதேபோல் நடிகர் விஜய் ஈழத் தமிழர்களைப் பற்றி பேசி வருவதால், அவரிடம் கையெழுத்து வாங்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் முடிவு செய்தனர்.

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு இடத்தில் இயக்குநர் சங்கர் இயக்கிவரும் நண்பன் படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் இருந்துள்ளார்.

படப்பிடிப்பு முடிந்து ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த விஜய்யிடம், கையெழுத்து போடும்படி கேட்டனர். இதற்கு நடிகர் விஜய் கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வன்னியரசு கூறியதாவது,

நடிகர் விஜய் என்ன நினைத்தாரோ தெரியவில்லை. எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி கையெழுத்து போட மறுத்துவிட்டார்.

இதையடுத்து விஜய்யின் தந்தை இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்டபோது அவர் கூறுகையில்,

உங்களைப் போலவே நாங்களும் ஒரு அமைப்பு வைத்திருக்கிறோம். உங்களுக்கு கையெழுத்து போட வேண்டிய அவசியம் இல்லை. படப்பிடிப்புக்கு தொந்தரவு கொடுக்காமல் அந்த இடத்தை விட்டு வெளியேறுங்கள் என்றார்.

ராஜபக்ச கொலைக் குற்றவாளி என்பதற்காகத்தான் இந்த கையெழுத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம். வேறு எந்த காரணத்துக்காகவும் இல்லை என்று நாங்கள் எடுத்துக் கூறினோம். இருப்பினும் அவர்கள் கையெழுத்து போட மறுத்துவிட்டனர் என்றார்.

மேலும் பேசிய வன்னியரசு, ஈழத் தமிழர்களுக்கு குரல் கொடுப்பதைப் போல விஜய் மக்களை ஏமாற்றி வருகிறார் என்று கூறினார்.

விஜய் கையெழுத்துப் போட மறுத்திருப்பது உலகத் தமிழர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

5 Responses to ராஜபக்சவை தண்டிக்க கோரி கையெழுத்து இயக்கம்! விஜய் கையெழுத்துப் போட மறுப்பு!!

  1. பார்த்தபன் தமிழ் நாடு‍
    இந்த விடயம் உண்மையாக இருந்தால், கடுமையான கண்டனத்தை விஜய்க்கு‍ நாம் அனைத்து‍ தமிழர்களும் தெரிவித்து‍ கொள்ள வேண்டும். தற்போது‍ தான் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கையின் ஒரு‍ அங்கமான கையொழுத்து‍ இயக்கத்தை ஆதரித்து‍ விடுதலைச் சிறுத்தைகளின் கட்சி மாபெரும் கையொப்ப இயக்கத்தை நடத்தி வருகிறது. மூன்று‍ மாதங்களுக்கு‍ முன்பே பல தமிழ் அமைப்புக்கள் இக்கையெழுத்து‍ இயக்கத்தை நடத்தி தமிழகத்தில் உள்ள நாடு கடந்த தோழமை மையத்தின் வாயிலாக ஐ.நா வுக்கு‍ அனு‍ப்ப பட்டு‍ விட்டது. இருப்பினும், தமிழ் நாட்டின் ஒரு‍ பிரபல கட்சியான விடுதலை சிறுத்தைகள் இது‍ போன்று‍ நடவடிக்கைகளை முன் எடுத்து‍ செல்லும் போது‍ அது‍ மென் மேலும் பிரபல்ம் அடையும், தமிழக மக்களுக்கு‍ இலங்கை பிரச்சனை, நாடு‍ கடந்த தமிழீழ அரசு‍ இவைகளை பற்றி ஒரு‍ விழிப்புணர்ச்சி ஏற்படும். விடுதலை சிறுத்தைகளுக்கு‍ எனது‍ வாழ்த்துக்கள். இரண்டு‍ மாதங்களுக்கு‍ முன் நான் (நான் ஒரு‍ வங்கி ஊழியன்) மட்டும் ஒரு‍ 600 கையெழத்தக்களுக்கு‍ மேல் வாங்கி நா.க.த.ஈ அரசின் தோழமை மையம் சார்பாக அனுப்பினேன். நான் கையெழுத்து‍ பெறும் போது‍ , எனது‍ கிளைக்கு‍ வந்த தமிழ் மக்களும் சரி, வேற்று‍ மொழி காரர்களும் சரி , மணதார கையொப்பத்தை இட்டு‍ எனது‍ முயற்சிகளு்க்கு‍ மணம் உவந்து‍ பாராட்டு‍ தெரிவித்தனர். மேலும் என்னிடம் இருந்து‍ கையெழுத்து‍ படிவத்தை பெற்று‍ தாங்களும் கையொப்பங்களை பெற்று‍ தருவதாக கூறி உதவி செய்தார்கள். எனக்கு‍ மிகவும் ஆச்சிரியத்தை ஏற்ப்படுத்தின. தமிழ் நாட்டு‍ மக்கள் சுயநலமிகள் அல்ல பெரும்பாண்மை மக்களுக்கு‍ தமி்ழ உணர்வு உள்ளது, இலங்கை தமிழர்கள் மீது‍ ஆழ்ந்த அனுதாபம் உள்ளது‍ என்பதை தெரிந்து‍ கொண்டேன். இதை இங்கு‍ சொல்லக் காரணம், விஜய் மட்டும் கையெழுத்து‍ இடாததற்க்கு‍ காரணம் யாது‍? ராஜபக்ச்சேவை தண்டிக்க அவருக்கு‍ மணம் இல்லையா, அல்லது‍ இலங்கையின் கை கூலியா, தமிழர்களின் எதிரியா, திமுக வை ஆதரித்த கட்சியான விடுதலை சிறுத்தைகள் நடத்தும் இயக்கத்துக்கு‍ ஆதரவு கொடுக்க கூடாது‍ என்ற முடிவா. சாதாரண மக்கள் எதையும் யோசிக்காமல் கையொப்பத்தை இடும் போது‍ விஜய்க்கு‍ என்ன யோசனை. இது‍ வரை இலங்கை தமிழர்களுக்காக போராட்டம் நடத்தியது‍ எல்லாம் வேடமா.

  2. இளமாறன் தமிழ்நாடு‍

    இந்த செய்தி மேலே உள்ள கட்டுரைக்கு‍ சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இதன் மூலம் நான் தமிழர்களை வேண்டி‍ கொள்வது‍ இது‍ தான்.
    தமிழர்களே தயவு செய்து‍ இந்த இணைத்தளத்துக்கு‍ சென்று‍ தமிழ் ஈழத்துக்கான வாக்குபதிவு நடத்த உங்கள் கையொப்பத்தை இடவும், உங்கள் நண்பர்களிடமும் கூறுங்கள், நம்மால் முடிந்த அளவு தமிழ் ஈழ போரட்டத்திற்க்கு‍ இது‍ போன்ற சிறிய உதவிகளை செய்யலாம் http://www.tamilsforobama.com/Referendum2011/english.asp

  3. இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் பினாமியாகச் செயல்படுவது தொல் திருமாவளவன் ஆகும். அவர் அங்கே கையெழுத்து வேட்டை ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். பலரிடம் சென்று கையெழுத்து வாங்கி வரும் இவர் தற்போது விஜயிடம் சென்றாராம், அவர் கையெழுத்துப் போட மறுத்துவிட்டாராம் இதனை தலைப்புச் செய்தியாகப் போட்டு தமிழ் வின் ஒப்பாரி வைப்பது ரொம்பவும் வேடிக்கையான விடையம். கலைஞர் குடும்பத்தை எதிர்த்து , உணர்வாளர் சீமானோடு சேர்ந்து ஜெயலலிதாவை ஆதரித்து தமிழகத்தில் ஆட்சிமாற்றத்துக்கு பெரிதும் உதவியவர் நடிகர் விஜய். அவர் மணம் முடித்துள்ளதும் ஒரு ஈழத் தமிழ் பெண்ணைத்தான் என்பதனையும் எவரும் மறந்துவிடவில்லை !

    கடந்த தேர்தலில் டெப்பாசிட்டை இழந்து, இருந்த இடம் தெரியாமல் போன தொல்.திருமாவளவன் அவர்கள் திரும்பவும் அரசியலில் பிரகாசிக்க ஈழத் தமிழர்களை நாடியுள்ளார். அவருடன் நாடு கடந்த அரசு சேர்ந்து கையெழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பித்தது. சரி எல்லாரிடமும் சென்று கையெழுத்து வாங்கிவரும் இவர் சொல்கிறார் நடிகர் விஜய் கையெழுத்து போடவில்லை என்று, முதலில் இவர்களது தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்தக் கோரிக்கையில் கையெழுத்துப் போட்டுள்ளாரா என்று சொல்லமுடியுமா இவர்களால் ? கடந்த ஆட்சிக்காலங்களில் கருணாநிதிக்கும் காங்கிரசுக்கும் வால் பிடித்துத்திரிந்த தொல் திருமாவளவனை எவ்வாறு நடிகர் விஜய் நம்புவார்.கொலை குற்றவாளி ராஜபக்சே வன்னியில் இனவழிப்பை மேற்கொண்ட நேரத்தில் கருணாநிதியோடும் அவரது கூட்டணித்தோழி சோனியாவோடும் உறவாடிய திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்பொழுதும் அவர்களது கூட்டணியில் இருந்து கொண்டே கையெழுத்து வேட்டை நடத்துகிறதாம். ராஜபக்சவோடு கைகுலுக்கிய திருமா இப்பொழுது அவரை கைது செய்ய கையெழுத்து வேட்டையாம் எப்படிபட்ட சந்தர்ப்பவாத அரசியல் முதலில் சந்தர்ப்பவாத அரசியலை விட்டுவிட்டு சுயநலம் பாராது அர்ப்பணிப்போடு செயல்பட கற்றுக்கொள்ளவேண்டும் .அதன் பின்னரே தொல் திருமாவளவர் அவர்களை ஈழத் தமிழர்கள் நம்புவார்கள்.

    நடிகர் விஜய் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் தமிழ் வின் இணையம் இச் செய்தியைப் போட்டது ஒரே காரணத்துக்காகத் தான். அது என்னவென்றால் நாடு கடந்த அரசின் ஊதுகுழலாக இவ்விணையம் செயல்படுவதுதான். ஊடகம் என்பது நடுநிலையாக இருக்கவேண்டும். இன்று நாடு கடந்த அரசுக்கு ஆதராவா செய்திகளை வெளியிட்டுவரும் லங்கா ஸ்ரீ இணையம், அவர்கள் எவரைக் காட்டினாலும் அவரை துரோகியாக சித்தரிக்க முனைகிறது. எனவே இவர்களின் போலியான ஒப்பாரியை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். மகிந்தருக்கு எதிரான கையெழுத்துவேட்டையை நாம் பிழை என்று கூறவில்லை. ஆனால் அதனைச் செய்ய முற்படுவோர் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கவேண்டும் அல்லவா ? இக் கையெழுத்து வேட்டையை ஈழத்துக்காகவும் ஈழ தமிழருக்காகவும் உண்மையாக போராடும் வேறு அமைப்புகள் கேட்டு விஜய் போடாமலிருந்தால் நாம் கண்டிக்கலாம்.

  4. இனப்படுகொலைக் குற்றவாளி ராஜபக்ச கும்பலை அனைத்துலக நீதிமன்றம் தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் பினாமியாகச் செயல்படுவது தொல் திருமாவளவன் ஆகும். அவர் அங்கே கையெழுத்து வேட்டை ஒன்றையும் ஆரம்பித்துள்ளார். பலரிடம் சென்று கையெழுத்து வாங்கி வரும் இவர் தற்போது விஜயிடம் சென்றாராம், அவர் கையெழுத்துப் போட மறுத்துவிட்டாராம் இதனை தலைப்புச் செய்தியாகப் போட்டு தமிழ் வின் ஒப்பாரி வைப்பது ரொம்பவும் வேடிக்கையான விடையம். கலைஞர் குடும்பத்தை எதிர்த்து , உணர்வாளர் சீமானோடு சேர்ந்து ஜெயலலிதாவை ஆதரித்து தமிழகத்தில் ஆட்சிமாற்றத்துக்கு பெரிதும் உதவியவர் நடிகர் விஜய். அவர் மணம் முடித்துள்ளதும் ஒரு ஈழத் தமிழ் பெண்ணைத்தான் என்பதனையும் எவரும் மறந்துவிடவில்லை !

    கடந்த தேர்தலில் டெப்பாசிட்டை இழந்து, இருந்த இடம் தெரியாமல் போன தொல்.திருமாவளவன் அவர்கள் திரும்பவும் அரசியலில் பிரகாசிக்க ஈழத் தமிழர்களை நாடியுள்ளார். அவருடன் நாடு கடந்த அரசு சேர்ந்து கையெழுத்து வேட்டை ஒன்றை ஆரம்பித்தது. சரி எல்லாரிடமும் சென்று கையெழுத்து வாங்கிவரும் இவர் சொல்கிறார் நடிகர் விஜய் கையெழுத்து போடவில்லை என்று, முதலில் இவர்களது தலைவர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்தக் கோரிக்கையில் கையெழுத்துப் போட்டுள்ளாரா என்று சொல்லமுடியுமா இவர்களால் ? கடந்த ஆட்சிக்காலங்களில் கருணாநிதிக்கும் காங்கிரசுக்கும் வால் பிடித்துத்திரிந்த தொல் திருமாவளவனை எவ்வாறு நடிகர் விஜய் நம்புவார்.கொலை குற்றவாளி ராஜபக்சே வன்னியில் இனவழிப்பை மேற்கொண்ட நேரத்தில் கருணாநிதியோடும் அவரது கூட்டணித்தோழி சோனியாவோடும் உறவாடிய திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தற்பொழுதும் அவர்களது கூட்டணியில் இருந்து கொண்டே கையெழுத்து வேட்டை நடத்துகிறதாம். ராஜபக்சவோடு கைகுலுக்கிய திருமா இப்பொழுது அவரை கைது செய்ய கையெழுத்து வேட்டையாம் எப்படிபட்ட சந்தர்ப்பவாத அரசியல் முதலில் சந்தர்ப்பவாத அரசியலை விட்டுவிட்டு சுயநலம் பாராது அர்ப்பணிப்போடு செயல்பட கற்றுக்கொள்ளவேண்டும் .அதன் பின்னரே தொல் திருமாவளவர் அவர்களை ஈழத் தமிழர்கள் நம்புவார்கள்.

    நடிகர் விஜய் கையெழுத்துப் போடாமல் விட்டதற்கு ஆயிரம் காரணம் இருக்கலாம். ஆனால் தமிழ் வின் இணையம் இச் செய்தியைப் போட்டது ஒரே காரணத்துக்காகத் தான். அது என்னவென்றால் நாடு கடந்த அரசின் ஊதுகுழலாக இவ்விணையம் செயல்படுவதுதான். ஊடகம் என்பது நடுநிலையாக இருக்கவேண்டும். இன்று நாடு கடந்த அரசுக்கு ஆதராவா செய்திகளை வெளியிட்டுவரும் லங்கா ஸ்ரீ இணையம், அவர்கள் எவரைக் காட்டினாலும் அவரை துரோகியாக சித்தரிக்க முனைகிறது. எனவே இவர்களின் போலியான ஒப்பாரியை முதலில் நாம் புரிந்துகொள்ளவேண்டும். மகிந்தருக்கு எதிரான கையெழுத்துவேட்டையை நாம் பிழை என்று கூறவில்லை. ஆனால் அதனைச் செய்ய முற்படுவோர் மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கவேண்டும் அல்லவா ? இக் கையெழுத்து வேட்டையை ஈழத்துக்காகவும் ஈழ தமிழருக்காகவும் உண்மையாக போராடும் வேறு அமைப்புகள் கேட்டு விஜய் போடாமலிருந்தால் நாம் கண்டிக்கலாம்.

  5. கருணாநிதிக்கு விஜயை பிடிக்கவில்லை என்பதற்காக, விஜய் கையெழுத்து போட மாட்டார் என்று தெரிந்தும் கையெழுத்து கேட்க வேண்டியதின் பின்னணி என்ன..? மு.க.வை குளீர் ஊட்ட எடுக்கும் முயற்சியா...? அல்லது இதுதான் உங்களின் அரசியல் செயல்பாடா..? 'நானும் ஜெயிலுக்குப் போறேன்'... 'ஜெயிலுக்குப் போறேன்' நானும் ரவுடி தான் என்ற தொனியிலான இலங்கை தமிழர் நலன் ஈடுபாடா..? இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஏ.பி.பரதன் நேர்மையாளர். விடுதலைப் புலிகளின் எதிர்ப்பையும் நேர்மையாக செய்தார்கள். தற்பொழுது ஈழ மக்களின் ஆதரவையும் நேர்மையாக செய்கிறார்கள். இவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்
    விடுதலைச் சிறுத்தைகள் அரசியல் குறித்து..!

    ஈழத் தமிழர்களுக்காக இங்குள்ள தமிழர்கள் துப்பாக்கியைத் தூக்க வேண்டாம், கையெழுத்துப் போட்டு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தினால் போதும் என்கிறார் தொல்.திருமா. தலித்துக்களுக்கு கூட நேர்மையாக இல்லாத காரணத்தால் தானே, உங்களுக்கு வழங்கிய பத்து சீட்டுக்களில் ஒன்றைக் கூட வெல்ல முடியவில்லை உங்களால், பின் எந்த கொள்கைக்கு தான் நேர்மையாக உள்ளார் தொல்.திருமா.? பார்ப்பனிய ஆதரவு என்ற ஒரே ஒரு கொள்கைக்கு தனது முழு ஆதரவை, நேர்மையை, நோக்கமாக, கொள்கையாக கொண்டுள்ளார் தொல்.திருமா அவர்கள்.

    போலி தலித்துகளின் ஒரே அரசியல் சக்தி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் அரசியல் கூடா நட்புடன் முடிவடைகிறது என்று சொல்லலாமா..? அல்லது கூடிய நட்புடன் முடிகிறது என்று கொள்ளலாமா...? பார்ப்பனியத்தை எதிர் கொள்ளாமல் தலித்துகளுக்கு விடுதலை கிடையாது என்பதை அயோத்தி தாசர் முதல் அம்பேத்கார் வரை மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லி விட்டார்கள். இவர் என்னடாவென்றால் திராவிட தலைவர் மு.கருணாநிதி தான் தனது ஆசான் என்று சொல்லுகிறார், இந்திய நாட்டின் வளங்களை கொள்ளை அடித்து சுருட்டிய பெரும் கூட்டம் இந்த மு.க.வும், மு.க.வின் குடும்ப கூட்டமும். இந்திய நாட்டின் வளங்களை கொள்ளை அடித்தாலும் ஒன்றும் இல்லை என்று கூட சொல்லுவார்கள், எனவே இப்படி சொல்லலாம். தமிழர்களின் ஒரே பெரிய இனத் துரோகிதான் இந்த மு.கருணாநிதி.

    பன்றிகள் கன்றுகளுடன் சேர்வதில்லை, அதுபோலவே கன்றுகள் பன்றிகளுடன் சேர்வதில்லை. இரண்டிலும் கட்டிப் புரளும் தலித்துகளின் போலி தொல்.திருமாவளவன் என்று கருதலாமா...? ஒரு பத்து கருணாநிதிக்கு சமமானவர் இந்த தொல்.திருமாவளவன் அவர்கள் என்றும் கருதலாம்.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com