Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சில் தேசத்தின் புயல்கள் நாளை தமிழீழ மக்கள் உணர்வுபூர்வமாக நினைவு கூர்ந்தனர். கடந்த சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு Max dormy மண்டபத்தில் ஈகைச்சுடர் ஏற்றலுடன் ஆரம்பமாகியது.

கடற்கரும்புலி மேஐர் ஈழவீரனின் சகோதரர் ஏற்றிவைத்து அக வணக்கம் செலுத்தப்பட்டு மக்களால் மலர்வணக்கமும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
கரும்புலிகளின் ஈகம் பற்றி செல்வி பானுசா கவிதை வடித்திருந்தார்.

எம் நெஞ்சங்களில் வாழும் கரும்புலிகளே உங்கள் இழப்பால் எங்கள் இதயம் தவியாய் துடிக்கிறது. ஆனாலும் உங்கள் மகத்தான சாவால் நிகழ்ந்ததை எண்ணி எங்கள் நெஞ்சம் பெருமை கொள்கின்றது.

உங்கள் ஈகம் வீண்போகாது இலட்சியம் அடைவோம் தமிழரின் தாகமும் தமிழீழத் தாயகமே உங்கள் கனவுடன் உங்கள் நினைவுடன் இலட்சியத் தமிழராய் வாழ்வோம் இது உறுதி அதுவரை நெருப்பு மனிதர்களே, எம் இதய தெய்வங்களே உங்களுக்கு எமது வீர வணக்கம்
என்ற கவிதையையே அவர் அங்கு வடித்திருந்தார்.

கடந்த சங்கொலி பாட்டுத்திறன் போட்டியில் மத்திய பிரிவில் முதலாவது இடத்தைப் பெற்ற சிறுமி 'நேற்றுவரை சந்தனமானாய்" என்ற பாடலினை உள்ளம் உருகப்பாடினார். அதனைத்தொடர்ந்து தாயகக்கலைஞர் தனபாலன் அவர்கள் தான் வாழ்ந்த காலத்தில் தன்னோடு பழகிய, தான்கண்ட தேசத்தின் புயல்கள் கரும்புலிகளின் உண்மைக்கதைகளை கூறியிருந்தார்.

நடைபெறப்போகின்ற பல தெரிவிப்புகளுடன் தாயக விடுதலை உணர்வுப்பாடல் நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ன உரமூட்டும் எழுச்சி உரையுடன் வீர வணக்க நிகழ்வு நிறைவு பெற்றது.

நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தமது உணர்வுகளை பகிர்ந்து கொண்டனர்.






0 Responses to பாரிசில் உணர்வு பூர்வமாக நடைபெற்ற கரும்புலிகள் தினம் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com