தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் அனுசரணையுடன் தமிழர் விளையாட்டுத்துறை பிரான்சு நடாத்தும் மாவீரர் நினைவு சுமந்த மெய்வல்லுநர் போட்டிகள் 2011 இன் இறுதிநாள் போட்டிகள் பாரிஸில் போர்த்து பந்தன் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரத் யூல் லதுமேக் விளையாட்டரங்கில் மிகச் சிறப்பாக ஆரம்பமாகி நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமாகிய நிகழ்வில் தேசியக்கொடியேற்றல், சுடரேற்றலைத் தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்ந்து மாவீரர் திருஉருவப்படத்திற்கு மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர்ந்து விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகி மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. இந்நிகழ்வில் பல கழகங்கள் பங்குபற்றுகின்றன.
இந்த விளையாட்டு நிகழ்வில் பல தமிழ் மாணவ மாணவிகழ் மிகவும் ஆர்வமாகக் கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.
மேலதிக தகவல்கள் பின்னர் தரப்படும்.
பிரான்சில் நடைபெறும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு நிகழ்வு! (படங்கள் இணைப்பு)
பதிந்தவர்:
தம்பியன்
17 July 2011



0 Responses to பிரான்சில் நடைபெறும் மாவீரர் நினைவு சுமந்த விளையாட்டு நிகழ்வு! (படங்கள் இணைப்பு)