Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தமிழகத்திற்கு முதன்முறையாக விஜயம் செய்யவுள்ள நிலையில் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜெயலலிதா ஹிலாரிக்கு எதனைக் கூற வேண்டும் என்பது தொடர்பாக ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு சில பரிந்துரைகள் முன்வைத்துள்ளது. ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கைக்கு இரு தலைவர்களும் அங்கீகாரம் வழங்க வேண்டுமெனவும் அமெரிக்கத் தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. சென்னைக்கு அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் முதல்தடவையாக காலடி எடுத்துவைக்கவுள்ளார்.

இந்த வாய்ப்பை சிறப்பான முறையில் முதலமைச்சர் ஜெயலலிதா பயன்படுத்த வேண்டுமென நாங்கள் விரும்புகிறோம் என்று ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்புப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஒபாமாவுக்கான தமிழர்களாகிய நாங்கள் எப்போதுமே உங்களை நேசித்து வருகின்றோம். ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை தொடர்பான விடயங்களை நீங்கள் ஹிலாரியின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் அந்த அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. அதேவேளை எதிர்வரும் 19 ஆம் திகதி தமிழகம் வருகைதரவுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன், தமிழ்நாட்டிலிருக்கும்போது இலங்கை தொடர்பான எந்தவொரு விடயம் குறித்தும் பேசமாட்டார் என்று சிரேஷ்ட இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு, சென்னைக்கு வரும் ஹிலாரி கிளிங்டன் அவர்களிடம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை பற்றி பேசும் படி வேண்டுகோள்! தமிழர்களுக்கான ஒபாமா அமைப்பு, சென்னைக்கு வரும் அமெரிக்க இராஜாங்க செயலாளர் திருமதி ஹிலாரி கிளிங்டன் அவர்களிடம் ஈழத்தமிழர்களின் இனப்பிரச்சனை பற்றி பேசும் படி வேண்டிக்கொள்வதாகும்.

0 Responses to ஓபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு ஜெயலலிதாவிடம் வேண்டுகோள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com