1983ம் ஆண்டு அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான NASA அதாவது National Aeronautics and Space Administration என்ற அமைப்பு வின்வெளி தொடர்பான ஆய்வினை மேற்கொள்வதற்காக ஒரு வின்கலத்தை வான் வெளியில் அனுப்பியிருந்தது.
அந்த விண்கலத்தின் பெயர் ((IRAS) - Infrared Astronomical Satellite. விண்வெளியில் எதையோ தேடிப் பறந்துகொண்டிருந்த இந்த விண்கலம் வித்தியாசமான ஒரு காட்சியை படிம்பிடித்தது.
நாசாவின் அந்த விண்கலத்தின் அதி சக்தி வாய்ந்த இன்பிரா ரெட் கமெரா பதிவுசெய்த அந்தக் காட்சியைப் பரிசோதித்த விண்வெளி ஆய்வாளர்களுக்கோ பாரிய அதிர்ச்சி. ஒரு மர்மப் பொருள் சூரியக் குடும்பத்தை நோக்கி மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் விடயம் விண்வெளி ஆய்வாளர்களுக்குத் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து X-planate என்றும், நிபிறு என்றும் அழைக்கப்படுகின்ற இந்த இருண்ட கோள் பற்றிப் பல்வேறு ஆய்வுகள், உண்மைகள், நம்பிக்கைகள், மறுப்புகள் பல தளங்களில் இருந்தும் தொடர்ந்து வெளிவந்துகொண்டுதான் இருக்கின்றன.
மனித இனத்திற்கும், அதன் எதிர்கால இருப்புக்கும் அச்சத்தை ஏற்படுத்தக்கூடியது என்று கருதப்படுகின்ற அந்தக் கோள் பற்றியும், அந்தக் கோளின் வருகையினால் பூமிக்கு ஏற்படக்கூடியதாக ஆய்வாளர்கள் எதிர்வு கூறுகின்ற ஆபத்துக்கள் பற்றியும்தான் இந்த வார உண்மையின் தரிசனம் ஆராய்கின்றது.
nirajdavid@bluewin.ch
பூமி அழியப் போகின்றதா? (உண்மையின் தரிசனம் - பாகம்-1):- நிராஜ் டேவிட் (காணொளி இணைப்பு)



0 Responses to பூமி அழியப் போகின்றதா? (உண்மையின் தரிசனம் - பாகம்-2):- நிராஜ் டேவிட் (காணொளி இணைப்பு)