Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழக முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருப்பது தொடர்பாக திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இது வரவேற்கப்பட வேண்டிய திட்டம்தான். இதனால் மாதம் ஒன்றுக்கு 55 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய்தான் செலவாகும் என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த அறிக்கையில் கலைஞர் கூறியிருப்பதாவது, கடந்த 2008ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில், இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கப்பல் மூலமாக முதல் கட்டமாக 80 ஆயிரம் குடும்பங்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, சர்க்கரை, சோப்பு மற்றும் துணிவகைகள் கொண்ட 10 கோடியே ஆறுலட்சம் ரூபாய் நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டது.

இந்த நிவாரணப் பொருட்களுடன் இலங்கையில் துயருறும் தமிழ் மக்களுக்காக தமிழக அரசு திரட்டிய நிதியில் எஞ்சிய 25 கோடி ரூபாய் நிதி உதவியாக வழங்கப்பட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன், அகதிகள் முகாம்களில் தங்கியிருப்போருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி உயர்த்தப்பட்டது. முகாம்களில் உள்ள கர்ப்பிணி பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி, வண்ண அடையாள அட்டைகள், இரண்டு வருடங்களக்கு ஒருமுறை சமையல் பாத்திரம், ஈமச்சடங்கு செய்வதற்கு வழங்கப்பட்டு வந்த உதவித் தொகை ரூ.2,500ஆக உயர்த்தப்பட்டது என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டது.

2004-2005ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் அகதிகள் முகாம்களுக்கு செலவிடப்பட்ட மொத்த தொகை 28 கோடி ரூபாய்தான். ஆனால் கடந்த 2008-2009ஆம் ஆண்டில் 48 கோடியே 58 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டது.

திமுக அரசு ஐந்தாவது முறையாக பதவியேற்றவுடன், இலங்கை தமிழர்கள் தமிழகத்தில் தங்கியுள்ள முகாம்களை பார்வையிட்டு அளித்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் பிரச்சனை குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற சிறப்பு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதிமுக அரசு அறிவித்துள்ள ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தையும், திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சாதனைகளையும் ஒப்பிட்டு பார்த்து இலங்கை தமிழர்களுக்கு அதிக உதவி செய்தது எந்த ஆட்சி என்பதை முடிவு செய்யலாம். இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.

0 Responses to இலங்கை தமிழர்களுக்கு ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்துக்கு வரவேற்பு: திமுக ஆட்சியில் பல நன்மைகள்: கலைஞர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com