Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா 2011 பிரித்தானியாவில் இம்மாதம் நடைபெறவுள்ளது.

வருடாந்தம் பிரித்தானியாவில் நடைபெறும் தமிழர் விளையாட்டு விழா இவ்வருடம் மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழாவாக தாயக நினைவுகளையும், தாயகத்தில் நடைபெறும் தமிழர் விளையாட்டு விழாவை ஒத்ததாகவும் நடைபெறவுள்ளது.

கோடைகால விடுமுறையின் இறுதி வாரமான இம்மாதம் 27 ஆம் திகதி சனிக்கிழமை (27-08-2011) அன்று வடமேற்கு லண்டன் பகுதியின் Windmill Ln, Southall, Middlesex UB2 4NE எனும் முகவரியில் அமைந்துள்ள "Warren Farm Sports Centre" மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பிரித்தானியா வாழ் அனைத்துத் தமிழர்களையும் உள்ளடக்கியதாக கடந்த காலங்களில் நடைபெற்றுவந்த இத் தமிழர் விளையாட்டு விழாவை பிரித்தானியத் தமிழர் ஒன்றியம் ஒருங்கிணைப்பதோடு எமது விளையாட்டுத் துறையினை வளர்க்கும் நோக்குடனும், சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளை உருவாக்கும் நோக்குடனும் மிகவும் சிறந்த முறையில் இம்முறை மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழாவாக நடாத்துவதோடு மாவீரர் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்களையும் வெற்றியாளர்களுக்கு வழங்கவுள்ளது.

மாவீரர்களான கேணல் கிட்டு, கேணல் சங்கர், கேணல் றமணன், லெப்.கேணல் விக்டர், லெப்.கேனல் புலேந்திரன், லெப்.கேணல் சந்திரன், லெப்.கேணல் திலீபன், மேஜர் சோதியா, மேஜர் பசீலன் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணங்களே வழங்கப்படவுள்ளன.

வரலாற்று நாயகர்களான இம் மாவீரர் ஞாபகார்த்த விளையாட்டுப் போட்டிக்கு அனுசரணை வழங்க விரும்புவோர் மற்றும் வெற்றியாளர்களுக்கான வெற்றிக்கிண்ணங்களை மேற்படி மாவீரர் ஞாபகமாக வழங்க விரும்புவோரும் 07809667933, 07904438436, 07958021524 ஆகிய தொலைபேசி இலக்கங்களினூடாகவோ அல்லது info@tsfuk.com , tsf2011uk@gmail.com எனும் மின்னஞ்சல்களூடாகவோ தொடர்புகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இப் போட்டிகளில் பங்குபற்றவிரும்பும், போட்டியாளர்கள், மற்றும் போட்டி அணிகள் www.tsfuk.com எனும் இணையத்தளத்தினூடாக முழுமையான விபரங்களை அறிந்துகொள்வதோடு, தமது பதிவுகளையும் மேற்கொள்ளமுடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது தாயகப் பாரம்பரியங்களோடு நடாத்தப்படவுள்ள இவ் விளையாட்டுவிழாவில் சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்கான ஏற்பாடுகள் பிரத்தியேகமாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

தாயகப் பொருட்களை வாங்கவும், மற்றும் தாயக உணவுவகைகளை உண்டு மகிழவும் பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரையும் வழமைபோல்கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் பிரித்தானியத் தமிழர் ஒன்றியத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

0 Responses to மாவீரர் ஞாபகார்த்த தமிழர் விளையாட்டு விழா 2011 பிரித்தானியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com