சிறிலங்கா அரசபடைகளால் 2009ம் ஆண்டின் முதல் பகுதியில் மட்டும் தமிழீழ மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலையின் ஆதாரங்களை தொகுத்து Channal 4 என்ற பிரித்தானிய தொலைக்காட்சியால் தயாரிக்கப்பட்ட சிறிலங்காவில் கொலைக்களம் என்ற விவரணப்படம் பல நாட்டு தொலைக் காட்சிகளில் ஒளிபரப் பட்டுள்ளது.
வரும் புதன்கிழமை 10.08.2011 அன்று டென்மார்க் தொலைக்காட்சியிலும் (DR2) இரவு 10.50 மணிக்கு ஒளிபரப்பபடும் என தெரியவந்துள்ளது.
சிறிலங்காவில் கொலைக்களம் ஒளிபரப்பப்பட்ட நாடுகளால் தமிழினப்படுகொலைக் கொலைக்கு எதிரான விசாரணையின் அவசியம் வலியுறுப்பட்டுள்ளது. அதே நேரம் Channal4 தொலைக்காட்சியின் விவரணப்படத்தை மற்றய தொலைக்காட்சிகள் ஒளிபரப்புவதை தடுக்கும் முயற்சியிலும் சிறிலங்கா அரசு முயன்று வருகின்றது.



0 Responses to டென்மார்க் தொலைக்காட்சியிலும் சிறிலங்காவில் கொலைக்களம்