ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவிற்காக உலகத் தமிழினம் உரிமைக் குரல் எழுப்ப வேண்டும் என்ற தமிழீழத் தேசியத் தலைவரது வேண்டுகோளிற்கு அமைவாக நடைபெற இருக்கும் உரிமை முழக்க நிகழ்விற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து தமிழ் மக்கள் திரளாக கலந்து கொண்டு மக்கள் புரட்சியை ஏற்படுத்த உள்ளனர். இதற்காக ஜரோப்பாவில் உள்ள பல நாடுகளிலிருந்தும் பேருந்துகள் அந்தந்த நாட்டு தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கு ஏதுவாக பிரித்தானியா நாட்டில் இருந்து தமிழர்களை ஜெனீவா நோக்கி அழைத்துச் செல்வதற்கான ஏற்பாட்டை ஜக்கியராச்சியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு மேற்கொண்டுள்ளது.பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் எமது உறவுகள் கீழ் இணைத்துள்ள விளம்பரத்தில் உள்ள தொடர்பிலக்கங்களூடாக தொடர்பு கொண்டு பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.




0 Responses to பொங்குதமிழ் நிகழ்விற்கு வலுச்சேர்க்கும் ஏற்பாடுகள்: பிரித்தானியா