ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இன்று நண்பகல் 12.20 மணி முதல் 12.40 மணி வரையிலும், பிரதமர் மன்மோகன் சிங்கை, நாடாளுமன்றக் கட்டடத்துக்கு உள்ளே இருக்கின்ற பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.
அப்போது பிரதமரிடம், ‘’கேரள அரசு கட்டத் திட்டமிட்டு உள்ள புதிய அணையில் இருந்து ஒரு சொட்டுத்தண்ணீர் கூடத் தமிழகத்துக்குக் கொடுக்க மாட்டார்கள்.
தமிழகத்தின் ஐந்துமாவட்டங்கள் பாலைவனமாகி விடும். இரண்டு மாநிலங்களுக்கும் நல்லது அல்ல. இந்தியாவின் ஒற்றுமைக்கு எதிராகவே போகும். முல்லைப்பெரியாறு பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்’’ என்ற கோரிக்கையை வைத்தார்.
அவரிடம் மேலும், ’’லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைப் படுகொலை செய்த இலங்கை அரசோடு செய்து கொண்டுள்ள அனைத்து பொருளாதார ஒப்பந்தங்களையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும்’’ என்ற கோரிக்கையை வைத்தார் வைகோ.
இலங்கை அரசுடனான பொருளாதார ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் வைகோ
பதிந்தவர்:
Anonymous
02 August 2011



0 Responses to இலங்கை அரசுடனான பொருளாதார ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும்: பிரதமரிடம் வைகோ