வருடாவருடம் நவம்பர் மாதம் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் மாவீரர்தினம் கொண்டாடப்படுவது அனைவரும் அறிந்தவிடயம்.
முள்ளிவாய்க்கால் இனவழிப்புவரை எமது தேசியத்தலைமையின் ஒழுங்கமைப்பின்கீழ் நடைபெற்றுவந்த இத்தேசிய நினைவெழுச்சி நாள் தற்போதைய நாட்களில் தலைமையினால் ஒழுங்கமைக்கப்பட்ட கிளைக்கட்டமைப்புக்கள் மூலம் உலகெங்கும் நடாத்தப்பட்டுவருகிறது.
யேர்மனியிலும் இந்நிகழ்வு எதிர்வரும் நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட இருக்கும் இந்நிலையில் யேர்மனிய மாவீரர் தின ஏற்பாட்டாளர்களால் மாவீரர் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன.
இறுதிப்போரில் வீரச்சாவடைந்து அறிவிக்கப்படாத நிலையில் இருக்கும் மாவீரர் விபரங்கள் உட்பட அனைத்து மாவீரர்களின் விபரங்களும் ஒழுங்குநிலைப்படுத்தப்படுகிறது.
யேர்மனியில் வாழ்ந்துவரும் தமிழுறவுகளும் உங்களிடம் இருக்கும் மாவீரர் விபரங்களை ஏற்பாட்டுக் குழுவினரிடம் தந்துதவுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
உங்கள் நகரங்களில் செயற்படும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்கள் ஊடாக இவ்விபரங்களை எமக்கு அனுப்பி வையுங்கள்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.
தொடர்புகட்கு
மாவீரர் பணிமனை
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு – யேர்மனி



0 Responses to மதிப்பிற்குரிய யேர்மன் வாழ் தமிழீழமக்களே...