Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கைத்தீவில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, மற்றும் போர்குற்றங்களை அனைத்துலக சுயாதீன விசாரணைக்கு உட்படுத்தக்கோரி (Independent International Inquiry) லண்டனில் நேற்று (18-08-2011) துண்டுப் பிரசுரப் பரப்புரை பிரித்தானியத் தமிழர் பேரவையாலும், அதன் பிரதேச ரீதியிலான கட்டமைப்பினாலும் (SW Region) முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் அதிகம் பயணிக்கும் தென்மேற்கு லண்டன் விம்பிள்டன் (Wimbledon) தொடரூந்து நிலையத்திற்கு அருகில் அனைத்து சமூக மக்களுக்கும் கிடைக்கக் கூடிய வகையில் துண்டுப்பிரசுர வழங்கல் முன்னெடுக்கப்பட்டது.

சனல்-4 தொலைக்காட்சியானது போர்குற்றவாளிகளான சிறீலங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ, முன்னாள் படைத் தளபதி சவேந்திர டீ சில்வா ஆகியோரை வெளிப்படுத்திக்காட்டிய இவ்வேளையில், மேற்கொள்ளப்பட்ட இந்த விழிப்புணர்வுப் போராட்டம் மக்களின் ஆதரவைப் பெற்றதை காணக்கூடியதாக இருந்தது.

இத் துண்டுப்பிரசுர வழங்கலானது, விம்பிள்டன் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தை அண்மித்துள்ள மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும், பிரதான சாலைகளிலும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரித்தானியத் தமிழர் பேரவையின் பிராந்தியக் கட்டமைப்பின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இத்துண்டுப்பிரசுரங்களைப் பெற்ற அனைத்து சமூக மக்களும் ஈழத்தமிழ் மக்களிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி கிடைக்க வேண்டும் என கருத்துக் கூறியதை அவதானிக்க முடிந்தது.

இது தொடர்பாக அடம் (Adam) என்பவர் கருத்துத் தெரிவிக்கையில், ஈழத் தமிழர் விடயத்தில் தம்மாலான உதவிகளை செய்வதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுப்பதன் மூலம் தமிழர்களுக்கு நீதி கிடைக்குமென தாம் நம்புவதாகவும் கூறினார்.

தமிழினத்திற்கு நீதி கிடைக்கும்வரை இவ்வாறான போராட்டங்கள் ஓயாது எனவும், தொடர்ச்சியாக இதனை முன்னெடுக்கப் போவதாகவும், தமிழர் பேரவையின் பிராந்திய உறுப்பினர்கள் கூறியுள்ளமை ஏனைய மக்களுக்கும் வலுவூட்டுவதாக அமைந்துள்ளது.

பிரித்தானிய தமிழர் பேரவையினால் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான போராட்டங்களுக்கு மக்கள் தம்மாலான ஆதரவினை வழங்கி, தமிழர்களின் நீதி வேண்டிய போராட்டங்களை வலுப்படுத்தி விடுதலை நோக்கிய பயணத்தை துரிதப்படுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுள்ளது.

0 Responses to லண்டனில் போர்க்குற்ற விசாரணைக்கு வலியுறுத்தி துண்டுப்பிரசுரப் பரப்புரை

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com