Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை அரசுக்கும் அரசாங்கத் தலைவர்களுக்கும் எதிராகப் போர்க்குற்றம் சாட்டியும் போர்க்குற்றங்களுக்காக சம்பந்தப்பட்ட அரச தலைவர்களும் பாதுகாப்புப் படைத் தலைவர்களும் சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட வேண்டுமெனக் கோரும் பிரேரணை ஒன்றை சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் முன் வைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுவிற்சர்லாந்தில் வாழும் புலிகள் இயக்கத் தலைவர்களும் ஆதரவாளர்களாகிய அரசியல் பிரமுகர்களும் இவ்வாறு சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் இலங்கைக்கெதிராக போர்க்குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் பிரேரணையைக் கொண்டு வருவதற்காக சுவிற்சர்லாந்து ஆளும் அரசியல் கட்சி முதலாக ஏனைய கட்சித் தலைவர்கள், கட்சிப் பிரமுகர்களுடன் தீவிர தொடர்புகளை மேற்கொண்டுள்ளதாகவும் விரைவில் இவ்வாறு இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுப் பிரேரணையை சுவிற்சர்லாந்து கிறீன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் லீ ஸ்கொட் எனப்படும் சுவிற்சர்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்குள்ள பாராளுமன்ற உறுப்பினர் மூலமாகவே இவ்வாறு இலங்கைக்கு எதிரான போர்க்குற்றப் பிரேரணை சுவிற்சர்லாந்து பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் எனவும் மேலும் குறித்த தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கிறீன் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் மூலம் இலங்கைக்கு எதிராக போர்க்குற்றச்சாட்டுப் பிரேரணை கொண்டு வருவதற்கான ஊடகத்தரப்பு,தகவல் வழங்கல் மற்றும் உதவிகளை செய்வதற்காக இலங்கையைச் சேர்ந்த முன்னாள் ஊடக அமைப்பின் தலைவர் ஒருவர் சுவிற்சர்லாந்து சென்றடைந்திருப்பதாக மேலும் குறித்த தகவல்கள் தெரிவித்துள்ளன.

இவ்வாறு அண்மையில் சுவிற்சர்லாந்து விமான நிலையத்தில் இந்த குறித்த இலங்கை ஊடக அமைப்பின் முன்னாள் தலைவர் அரைக்காற்சட்டை மற்றும் பயண உடைகளுடனேயே வந்திறங்கியதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இலங்கை ஊடக அமைப்பின் முன்னாள் தலைவர் கிறின் கட்சித் தலைவர் லீ.ஸ்கொட் மற்றும் அவருடன் சம்பந்தப்பட்ட அரசியல்வாதிகளைச் சந்தித்து குறித்த போர்க்குற்ற பிரேரணைக்கு வேண்டிய ஊடகத் தகவல்களை வழங்கி வருவதாகத் தெரிய வருகின்றது.

0 Responses to இலங்கை அரசுக்கு எதிராக சுவிஸ் பாராளுமன்றில் பிரேரணை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com