இலங்கை அரசாங்கமே தங்களை இங்கு அனுப்பியதாகவும் தான் இலங்கை அரசாங்க பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்தவன் என்றும் மட்டக்களப்பு மாவடிவேம்பில் மக்களிடம் பிடிபட்ட மர்ம நபர் ஒருவர் பொது மக்களின் சித்திரவதை தாங்கடியாமல் உண்மையை ஒப்புக்கொண்டுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.இது குறித்து மேலும் தெரியவருவதாவது அண்மைக்காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்திவரும் மர்ம மனிதர்கள் இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பு அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் மட்டக்களப்பு மாவடிவேம்பில் பிடிபட்ட மர்ம மனிதன் ஒருவன் பொது மக்களின் சித்திரவதை தாங்கடியாமல் இந்த உண்மையை கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை(10.08.2011) காலை மட்டக்களப்பு மாவடிவேம்பு பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்டு பிடிக்கப்பட்ட மர்ம நபர் அல்லது கிறீஸ் மனிதன் என்று அழைக்கப்படும் நபரை பொதுமக்கள் கட்டிவைத்து சித்திரவதை செய்தபோது �நான் இலங்கை அரச படைப்பிரிவைச் சேர்ந்தவன் என்னை அடிக்கவேண்டாம் என கையெடுத்து கும்பிட்டு ஒரு அடையாள அட்டையொன்றை காட்டியதாக தெரியவந்திருக்கின்றது.
இதன் பின்னர் சற்று நேரத்தில் சம்பவ இடத்திற்கு சென்ற இராணுவத்தினர் குறித்த மர்ம மனிதனை தாங்கள் பொலீசாரிடம் ஒப்படைப்பதாக கூறி கூட்டிச்சென்றதாகவும் ஆனால் இதுவரை அந்த மனிதன் பற்றியோ அந்தச் சம்பவம் பற்றியோ இலங்கை பொலீசார் எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கின்றனர் இப்பிரதேச மக்கள்.
எனவே மேற்படி சம்பவத்தின் ஊடாக மர்ம மனிதர்களின் போர்வையில் சிங்கள அரசு ஒரு தழிழின அடக்குமுறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது என்பது தெட்டத்தெளிவாக தெரியவந்துள்ளது.
அதிர்வு
kallakkooddam arasu