கனடாவில் யுத்த குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்த இலங்கை குத்துச்சண்டை வீரரான இளந்தரிதேவஹே குலத்துங்க அமெரிக்க மியாமி சிறைச்சாலையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளதாகவும் சர்வதேச ஊடகத்தில் செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவினுள் யுத்தகுற்றவாளிகள் ஊடுருவியிருக்கலாம் என கனேடிய எல்லைப் பாதுகாப்புச் சேவை முகவர் அமைப்பு அமெரிக்காவுக்கு அறிவுறுத்தியிருந்ததை அடுத்து, இளந்தரிதேவஹே என்பவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதேவேளை அவரை கனடாவிற்கு திருப்பி அனுப்பக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



0 Responses to இலங்கை யுத்தகுற்றவாளி அமெரிக்காவில் கைது!