சிங்கள இனவெறி அரசு தமிழர்கள் மீதான இனப்படுகொலை மேற்கொள்ளும் முகமாக 2006 ஆண்டு ஆவணி மாதம் 18 திகதி ஈழத்தமிழர்களின் எதிர்கால சந்ததியை அழிக்கும் முகமாக செஞ்சோலை வளாகத்தில் முதலுதவி கற்பதற்காக காத்திருந்த செல்வங்களை கொன்றழித்தான்.
5 ஆண்டுகள் கடந்து சென்றாலும் நெஞ்சில் நீங்காத நினைவோடு அவ் செல்வங்களை வணங்கி அவர்களின் திருயுருவ படத்துக்கு சுடர் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. அத்தோடு செஞ்சோலை குஞ்சுகளின் நினைவு சுமந்து கவிதைகளும் காலத்தின் தேவை கருதி விளக்கவுரைகளும் வழங்கப்பட்டது.
பெர்லின் நகரத்தில் அதே நேரத்தில் ஈழத்தமிழர் தேசியச் சின்னம் 'சிறுத்தை ' வெற்றிக் கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டச் சுற்றிப் போட்டியும் சிறப்பாக நடைபெற்றது .தேசியக்கொடி ஏற்றப்பட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தம் இன்னுயுரை அர்ப்பணித்த மாவீரர்களுக்கும் சிங்கள மற்றும் இந்திய இனவெறி அரசால் படுகொலை செய்யப்பட்ட நாட்டுப்பற்றாளர்களுக்கும் செஞ்சோலை சிறார்களுக்கும் மக்களுக்கும் சுடர் ஏற்றி அகவணக்கம் மற்றும் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
இறுதியாக சிறுத்தை வெற்றிக் கிண்ணத்துக்கான உதைப்பந்தாட்டச் சுற்றிப் போட்டியில் பங்குபற்றி வெற்றி ஈட்டிய கழகங்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது .சிறப்பாக ஈழத்தமிழர்களின் பல்லின சமூகத்தினரின் இணைப்பை பலப்படுத்தும் முகமாக அனைத்து கழகங்களிலும் இரு தமிழர்கள் அல்லாத விளையாட்டு வீரர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நன்றி.
tfogermany@gmail.com
யேர்மன் தமிழ் பெண்கள் அமைப்பு.
செய்தித் தகவல்: யேர்மன் ஈழத்தமிழர் மக்கள் அவை.
0 Responses to யேர்மனியில் செஞ்சோலை நினைவு நிகழ்வுகள் (படங்கள் இணைப்பு)