தற்போது லிபியத் தலைநகர் திரிப்போலிக்கு சுமார் 50 கி.மீ தொலைவில் நிற்கும் லிபிய போராளிகள் விரைவில் தலைநகரை கைப்பற்றி, கடாபியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவோம் என்று இன்று செவ்வாய் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்கள்.
இதுகுறித்து கருத்துரைத்த போராளிகள் தரப்பு கடாபியின் படைகள் கடைசி ஒரேயொரு முகாமிற்குள் முடங்கிக் கொள்ள முயன்றுள்ளன. இந்த வேகத்தில் பின்தங்கிப் போனால் மூன்றே வாரங்களில் திரிப்போலி வீழ்ந்துவிடும் என்றும் அவர் கூறினார்.
இப்போது ஸாவியாவில் இருந்து திரிப்போலிக்கான பிரதான சாலையை தாம் திறந்துவிட்டுள்ளதாகவும் ருனீசியாவிற்கான பிரதான சாலை தமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
ரமடான் பண்டிகை முடிவடையும்போது தாம் வெற்றியை கொண்டாடுவோம் என்றும் போராளிகள் தரப்பு நம்பிக்கை தெரிவிக்கிறது. எண்ணெய் வளம் நிரம்பிய ஸாவியா நகரத்தில் தற்போது கடாபியின் எறிகணைத்தாக்குதல் நடக்கிறது. எனினும் கடாபியின் கடைசித் தரிப்பிற்கும் தமக்குமான இடைவெளி வெறும் 45 கி.மீ மட்டுமே என்றும் தெரிவிக்கிறார்கள்.
0 Responses to வெற்றியை நெருங்குகிறார்கள் லிபிய போராளிகள்