தாயகம், தேசியம், தன்னாட்சி உரிமை எனும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசகைளை,
சனநாயகபூர்வமாக உலக அரங்கில் பிரதிபலித்து நிற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், சுதந்திர தமிழீழத்தை நோக்கிய, இன அழிப்பை – சுயநிர்ணய உரிமையை மையப்படுத்திய உலகளாவிய வேலைத் திட்டங்களை முன்வைத்துள்ளது.
தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதற்கும், இனத்தின் உறுதியான இருப்பை நிலைநிறுத்தவும் வேண்டிய, எட்டு அடிப்படை குறிக்கோள்களை மையப்படுத்தி, உலகளாவிய வேலைத் திட்டங்களாக முன்வைக்கப்பட்டுள்ளது.
குறிக்கோள்களை மையபடுத்தி, அந்த குறிக்கோள்களை எட்டுவதற்குரிய அடிப்படை செயற்திட்டங்களுக்கு முன்மொழியப்பட்டுள்ளன.
நா.த.அரசாங்க பிரதமர் செயலகத்தினால் உலக தமிழர்களின் கவனத்துக்கு முன்வைக்கப்பட்டுள்ள இந்த உலகளாவிய வேலைத் திட்டங்களில் பங்கெடுத்து, சுநத்திர தமிழீழத்தையும் நோக்கியும், இனத்தின் இருப்பையும் உறுதியாக நிலைநிறுத்திக் கொள்ளவும், ஆர்வமுள்ள அனைவரையும் பங்கெடுக்குமாறு கோரப்படுள்ளது.
இது தொடர்பில், பிரதமர் செயலகத்தினால் வெளியிடப்பட்டுள் செய்திக்குறிப்பில், தாயகத்திலும் – புலத்திலும் உள்ள அனைத்து உலகத் தமிழ் மக்களும் இதில் பங்கெடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கபட்டுள்ளதோடு, தமிழர் உரிமைகளுக்காக பாடுபடுகின்ற அனைத்து அமைப்புக்களும், இந்த வேலைத் திட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*தலைமை தாங்கி, திட்டத்தை நடைமுறைப்படுத்தி, உயர்செயல் நிறைவேற்றத்தை தூண்டுதல்,
*மிகச்சிறந்த செயல்கள் வழியே நிர்வாழு ஒழுங்கில் இலக்கை அடைதல்.
*குடிசார், அரசியல், பண்பாட்டு, பொருளாதார, சமூக, கூட்டு உரிமைகளை சுதந்திரமாக பயன்படுத்துதல்.
*அரசியல் அதிகாரத்தை சுதந்திரமாக தீர்வுசெய்தல்.
*பண்பாட்டை சுதந்திரமாக விருத்தி செய்தல்.
*சுற்றுப்புற தாக்கங்களை, பாதிப்புகளை மனதில் எடுத்து பொருளாதாரத்தை சுதந்திரமாக கட்டி எழுப்புதல்.
*சமூகத்தை சுதந்திரமாக மேம்படுத்துதல்.
*உள்ளக விவகாரங்களை காத்திரமாக முன்னேற்றுதல், செய்திகளை பரிமாறி பரப்புரைத்தல், செயற்திட்டங்களுக்கு உறுதுணை வருவாயை தோற்றுவித்தல்.
மேற்குறிப்பிட்டுள்ள எட்டு குறிக்கோள்கள் வெளியிடப்பட்டுள்ள வரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்தக் குறிக்கோள்களை அடைவதற்கான 23 செய்திட்ட வழிகாட்டுதலும் இவ்வரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
உலகளாவிய இவ்வேலைத் திட்டங்களில் பங்கெடுத்துக் கொள்ளவும், மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ளவும் eelamtigga91@live.com இம்மின்னஞ்சல் வழியே தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, அனைவரது கவனத்துக்கு கொண்டு செல்லும் முகமாக வெளியிடப்பட்டுள்ள உலகளாவிய இவ்வேலைத் திட்டங்கள் தொடர்பிலான, விரிவான விளக்கங்களையும், அனைவரது பங்கெடுப்பை உறுதி செயது கொள்ளவும், செப்ரெம்பர் 15-30 ஆகிய நாட்களுக்கு ஊடகங்கள் வழியே தொடர்பாடல் நிகழ்சிகள் முன்னெடுக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதம் ஊடகசேவை
தகவல்துறை அமைச்சகம்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
சுதந்திர தமிழீழத்தை நோக்கிய தமிழீழ அரசாங்கத்தின் உலகளாவிய வேலை திட்டங்கள்!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
20 August 2011
0 Responses to சுதந்திர தமிழீழத்தை நோக்கிய தமிழீழ அரசாங்கத்தின் உலகளாவிய வேலை திட்டங்கள்!