இந்தியாவுக்கு மிகவும் ஆதரவான(நட்பு) நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள விவகாரத்தில் பின்வாங்கப் போவதில்லை என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஹினா மீண்டும் கூறியுள்ளார்.
மாலத்தீவின் அட்டு தீவில் நேற்று தொடங்கிய சார்க் நாடுகளின் 17வது உச்சி மாநாட்டில் ரப்பானி கலந்து கொள்கிறார்.
இந்தியாவுக்கு நட்பு நாடு என்ற அந்தஸ்து வழங்கப்பட்ட விவகாரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர், இந்தியாவுக்கு நட்பு நாடு அந்தஸ்து வழங்கும் விவகாரத்தில் பின்வாங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என்றார்.
நட்பு நாடு என்று இந்தியாவுக்கு சான்று வழங்கப்படும் என்று சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். இது தவறு. இரு நாடுகளுடனான வர்த்தகத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்தான் நட்பு நாடு என்று அழைக்கப்படுகிறது.
மேலும் அண்டை நாடுகளுடன் நட்புறவை மேம்படுத்திக் கொள்ள பாகிஸ்தான் முயன்று வருகிறது. குறிப்பாக இந்தியாவுடனான அமைதி பேச்சு தொடரும் என்றார்.



0 Responses to இந்தியா எப்பொழுதுமே நட்பு நாடு தான்: ஹினா ரப்பானி