Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த வாரம் சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட புதிய காணொளி காரணமாக இலங்கைக்கு மேலும் நெருக்குதல்கள் ஏற்பட்டுள்ளது. ஐனாவின் உறுப்பு நாடு என்ற வகையில் அது ஐநாவின் சாசனத்துக்கு ஏற்ப்பவே நடக்கவேண்டும் என்பது மரபு.

குறிப்பாக சித்திரவதைகளை தடுக்கும் பல சட்டங்கள் ஐனாவால் பின்பற்றப்பட்டு வருகின்றது. ஆனால் அதன் உறுப்பு நாடுகளில் ஒன்றான இலங்கையில் சித்திரவதைகள் இரகசிய சிறைக்கூடங்களில் நடப்பதாக ஆதாரத்துடன் கூடிய காணொளி வெளியானது யாவரும் அறிந்ததே.

இதனால் ஏற்பட்டுள்ள நெருக்குவாரங்களைச் சமாளிக்க இலங்கை அரசானது தமது நாட்டில் சித்திரவதைகள் எதுவும் நடைபெறவில்லை எனவும் அவ்வாறு யாரவது ஆதாரத்துடன் கூறினால் தாம் அது குறித்து விசாரணை நடத்தத் தயார் எனவும் வழமையான பாணியில் தெரிவித்துள்ளது.

சித்திரவதைக்கு எதிரான ஐனாவின் கமிட்டியில் உரையாற்றிய பீரிஸ் இலங்கையில் இரகசிய முகாம்கள் இல்லை எனத் தெரிவித்துள்ளார். அத்தோடு தம்மிடம் சரணடைந்த சுமார் 11,000 போராளிகளில் 689 பேர் மட்டுமோ மீதம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றையவர்கள் அனைவரையும் தாம் விடுவித்துவிட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். இருப்பினும் இலங்கையில் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் சுமார் 7 இரகசிய முகாம்களை நடத்திவருவதாக குற்றஞ்சாட்டப்பட்டு வருகிறது. இம் முகாம்களிலேயே பலர் தடுத்துவைக்கப்பட்டு இன்னமும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

0 Responses to இலங்கையில் சித்திரவதை என்ற சொல்லுக்கே இடமில்லையாம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com