Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து மதிமுக சார்பில் 13 இடங்களில் இன்று மறியல் போராட்டமும், கண்டன பேணியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேனியில் இருந்து காலை 10 மணிக்கு குமுளியை நோக்கி புறப்பட்டார். அப்போது, சீலையம்பட்டி என்ற இடத்தில் போலீசார் அவரை தடுத்தனர். அவருடன் வந்த பழ.நெடுமாறனையும் போலீசார் கைது செய்தனர்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

கேரள முதல் அமைச்சருக்கும், கேரள அச்சுதானந்தன் கூட்டத்தினருக்கும் சொல்லுகிறோம். எங்கள் வாழ்வை அழிக்க நினைக்காதீர்கள். தமிழகம் பொங்கி எழுந்துவிட்டது. யாரும் கட்டுப்படுத்த முடியாது. அணையை நீ நெருங்கினால் லட்சக்கணக்கானவர்கள் அணிவகுத்து வருவார்கள். எந்த மிலிட்டரியும் தடுக்க முடியாது.

இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், வியாபாரிகள் என எல்லா தரப்பு மக்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு தமிழகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. எனவே நம் எதிர்காலத்தை காக்கின்ற இந்த கிளர்ச்சி தானாகவே எழுந்துவிட்டது. தமிழக பத்திரிகைகள், ஊடகங்கள் பொறுப்புணர்ச்சியோடு செயல்படுகின்றன. இவ்வளவுக்கும் காரணம் கேரளாவில் உள்ள பத்திரிக்கை. கேரள ஊடகங்கள். அவர்களுக்கு சொல்லுகிறோம். புத்தி வரட்டும் உங்களுக்கு. எங்களை அழிக்க வேண்டும் என்று நினைத்தால் பிறகு நீங்க பட்டிணி கிடைக்க வேண்டியதாகயிருக்கும் என்றார்.

0 Responses to தமிழகம் பொங்கி எழுந்துவிட்டது - அணையை நீ நெருங்கினால்...: வைகோ

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com