Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கையை கண்டித்து, செங்கோட்டையில் கேரளா செல்லும் பாதையில் முற்றுகையிட்ட நாஞ்சில் சம்பத் உள்பட 500 பேர் கைது செய்ப்பட்டனர்.

தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் 13 வழிச் சாலைகளிலும் மதிமுக சார்பில் முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நெல்லை மாவட்டம் தமிழக கேரள எல்லையான செங்கோட்டையில் நடந்த முற்றுகை போராட்டத்தில் மதிமுக கொள்கைப் பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்துகொண்டார்.

முன்னதாக அவர் பேசுகையில், தேவிகுளம், பீர்மேடு முன்பு தமிழகத்தில் இருந்ததை பிரதமர் நேரு கேரளாவிற்கு கொடுக்கும்படி சொன்னதால், அது பிரித்துக்கொடுக்கப்பட்டது. ஆனால் அங்கே லட்சணக்கணக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் கேரள அரசோ, 119 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை கொண்டு வந்து, அங்கு குடியேற்றியது. உனக்கும் சிங்களவனுக்கும் என்ன வித்தியாசம்.

நீங்கள் விரதம் இருந்த ஐயப்ப சாமிகளை அடித்து தாக்குகின்றீர்களே, இந்தியாவில் இதுபோல் எங்காவது நடந்தது உண்டா. ஒரு எப்ஐஆர் போட்டது உண்டா. இந்தியாவே உள்துறை அமைச்சர் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. கேரளாவில் என்ன நடக்கிறது என்று கேட்டாயா. உச்சநீதிமன்றத்தை மதிக்கவில்லையே. இதைப்பற்றி ஒரு வார்த்தையாவது மத்திய அரசு கேட்டிருக்குமா. சிந்து நதிநீர் பங்கீட்டில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்த பாகிஸ்தான் தெரியுமா இந்தியாவின் கட்டுமானத்தையே அசைக்க நினைத்த அந்த பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் சிந்து நதிநீர் பங்கீட்டில் எந்த பிரச்சனையும் இல்லை.

சபரிமலை சாஸ்தாவை பிரபலப்படுத்தியவரே பிடிஆர் ராஜன் என்கிற தமிழர்தான். தமிழகத்தில் 30 லட்சம் கேரள மலையாளிகள் ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறார்கள். அவர்கள் அன்றாடம் பயன்படுத்தும் அந்த தண்ணீர் அளவையாவது கொடுங்கள்,. நாங்கள் கேட்பது எங்கள் உரிமையைத்தான். சாது மிரண்டால் காடு கொள்ளாது. நாங்கள் சாக்கடை புழுக்கள் அல்ல. சரித்திர சக்கரங்கள். அதை உனக்கு உணர்த்துவோம் என்றார்.

0 Responses to நாங்கள் சாக்கடை புழுக்கள் அல்ல: நாஞ்சில் சம்பத்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com