சேலம் மாவட்ட பாமக பொதுக்குழு பிசிசி திருமண மண்டபத்தில் நடந்தது. இதில் பாமக தலைவர் ஜி.கே.மணி, பாமக மாநில இளைஞர் அணி செயலாளர் அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். பொதுக்குழு கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ்,
மொழி, பண்பாடு, நாடு இதில் முன்னின்று போராடி வருவது பாமக. 16.07.1989ல் பாமக தொடங்கப்பட்டது. 1989 டிசம்பரில் நாடாளுமன்ற தேர்தல் வந்தது. அதில் 7 சதவீதம் ஓட்டு பாமக சுயேட்சையாக வாங்கியது. கட்சி ஆரம்பித்து 3 மாதத்தில் யானை சின்னத்தை அங்கீகாரம் பெற்றோம்.
1991ல் 9 சதவீதம் ஓட்டு பாமக வாங்கியது. 1996ல் சட்டமன்ற தேர்தலில் 4 எம்எல்ஏ பாமக பெற்றது. அப்படி இருந்த பாமக, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடம்கூட பிடிக்கவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் 3 எம்எல்ஏ பாமக பெற்றது.
அதனால் இதற்கு மாற்றாக புதிய அரசியல், புதிய நம்பிக்கை, புதிய பார்வை. இதில் ஊருக்கு 4 அமைப்பு முன் நிறுத்துகிறார்கள். பாட்டாளி இளைஞர் சங்கம், பாட்டாளி இளம் பெண்கள் சங்கம், தமிழக மாணவர் சங்கம், வன்னியர் இளைஞர் படை என 4 அமைப்புகளுக்கும் தலா 6 பேர் என மொத்தம் 24 பேர். இவர்கள் அனைவரும் 200 வன்னியர்களை பார்த்து, அவர்களை வாக்கு வங்கியமாக மாற்ற வேண்டும். இதை பின்பற்றினால் தனித்து ஆட்சியை பிடிக்கலாம்.
குழந்தைகள் மேல, குலதெய்வம் மேல, பெற்றோர்கள் மேல சத்தியம் வாங்க வேண்டும். இந்த சத்தியத்தை வாங்கிவிட்டால் வன்னியர் வாக்கு வங்கி வெற்றி பெறும். பாமக வெற்றி பெறும் என்றார்.
0 Responses to சத்தியம் வாங்க வேண்டும்: ராமதாஸ்