முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சனையால் கேரள வாழ் தமிழ் மக்கள் தாக்கப்பட்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு பெரும் காட்டு வழிகளில் இருட்டு நேரங்களில் நடையாய் நடந்து தமிழகத்திற்குள் வருவதைப் பார்த்து கொந்தளித்துப் போயிருக்கின்றனர் தமிழக மக்கள்.
இந்த முல்லைப் பெரியாறு அணையில் தமிழகத்திற்கு உள்ள உரிமையையும், தமிழகத்தை நம்பியே கேரளா இருப்பதை கேரள மக்களுக்கு உணர்த்தவும் வேண்டி கேரளா செல்லும் 13 வழித் தடங்களை மறிக்கும் போராட்டத்தை முன்னின்று நடத்தியது ம.தி.மு.க.
வாளையாறு வழித் தடத்தில் க.க சாவடியில் நடந்த உணர்ச்சி மிகப் பெருங் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது... கேரள ரெஜிஸ்ட்ரேஷன் கொண்ட ஆம்புலன்ஸ் வேன் சைரன் எழுப்பிக் கொண்டு வர…உயிர் காக்க போகும் அந்த வாகனத்திற்கு வழி விடுங்கள் என்று மைக்கில் குரலொலிக்க.. சாலையை மறித்து நின்ற மொத்தக் கூட்டமும் வழி விட்டு நிற்க அந்த ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பின்னாலயே கேரளா ரெஜிஸ்ட்ரேசன் கொண்ட ஒரு டூ வீலரில் ஒரு மலையாளி வேகமெடுப்பதை பார்த்து டூ வீலரை தடுத்து விட்டனர் போராட்டக்காரர்கள். ஒரு கும்பல் வண்டி சாவியைப் பிடுங்கப் போக.
அடிடா அந்த மலையாளத்துக்காரன என இன்னொரு கும்பல் பாய வெல வெலத்துப் போன அந்த மலையாளிக்கு போலீஸ்காரர்கள் உதவப் போனாலும் யாரும் கேட்பதாயில்லை. ஆனால் அந்த மலையளியோ..என்டச்சன் மரிச்சுப் போயி. ஆம்புலன்ஸ்ல ஏற்றி;க் கொண்டு போகுனுண்டு..என உயிருக்குப் பயந்து பதறுவதைப் பார்த்தவர்கள்…விட்ருங்கப்பா அந்த ஆளை... இறுதிக் காரியத்துக்காக போற ஒரு மனுஷன நிறுத்துனதே தப்பு.
கேரளாக்காரனுகளுக்கு தான் உணர்ச்சி இல்லாம நம்ம மக்கள அடிச்சு துரத்துறனுகன்னா நாமளும் அதையே செய்யறதுல என்ன உணர்வு இருக்கு.? மலையாளிக்கும் தமிழனுக்கும் வித்தியாசமிருக்கு .அதை அவுங்க உணர்றதுக்கான சம்பவமா கூட இது இருக்கலாம். அந்தாள விட்ருங்க..என கூட்டத்தை விலக்கி ஒருவர் அனுப்பி வைக்க... அந்த மலையாளி கண்ணீர் விட்ட படியே அங்கிருந்து நகர்ந்து போனார்.
கோவை அருள்குமார்
மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு)
பதிந்தவர்:
ஈழப்பிரியா
21 December 2011
0 Responses to மலையாளிக்கும் தமிழனுக்கும் உள்ள வித்தியாசம்: நெஞ்சை தொடும் சம்பவம் (படங்கள் இணைப்பு)