இறுதிக்கட்டப்போரில் ஏற்பட்ட சிவிலியன் பாதிப்புகள், சிவிலியன் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்பில் இராணுவத்தின் தவறுகளைக் குற்றஞ்சாட்டாது நழுவியுள்ளது நல்லிணக்க ஆணைக்குழு.இவ்வாறு நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து “இந்து” பத்திரிகை விமர்சித்துள்ளது.
இதுதொடர்பில் தமிழகத்தில் இருந்து வெளியாகும், வலதுசாரி, தமிழர் விரோதப் பார்ப்பன கருத்தியலைக் கொண்ட பத்திரிகையான “இந்து” பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பவை வருமாறு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இலங்கை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நாடாளுமன்றத்தில் அண்மையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இது புலிகள் இயக்கம் முழுமையாகத் தோற்கடிக்கப்பட்டதுடன், முடிவடைந்த இலங்கை இராணுவத்தின் இறுதிக்கட்டப்போரின்போது “கணிசமான” சிவிலியன் பாதிப்புகள் இடம்பெற்றுள்ளன என்ற உண்மையை நிலைநிறுத்தியுள்ளது.
இதன்மூலம் இந்த ஆணைக்குழு “சிவிலியன் பாதிப்புகள் பூஜ்யம்” என்ற இலங்கை அரசின் முன்னைய நிலைப்பாட்டை ஒருபடி மேல் நோக்கி கடந்துள்ளது. இந்தப் பாதிப்புகளுக்கு இராணுவத்தின் தவறே காரணம் என பழிசுமத்துவதற்கான அதிசிரம சாத்தியமான கடமையிலிருந்து இந்த ஆணைக்குழு அரைகுறை சாட்சியங்களோடு நழுவியுள்ளது.
எனினும், இந்தக் கைவிலங்கு இத்தகைய பெரும்பாலான செயல்களுக்காக விடுதலைப்புலிகள் மீது பழிசுமத்த இந்த ஆணைக்குழுவைத் தடுக்கவில்லை. பயங்கரவாதக் குழுவோடு போராடுவது இலங்கைக்கு ஒரு கடினமான சவாலாகவே இருந்தது. நல்லிணக்க ஆணைக்குழு, 2002ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கையை விமர்சித்துள்ளது. இலங்கை அரசையும், விடுதலைப்புலிகளையும் சமத்துவமான அதிகாரம் படைத்தவையாக இந்த உடன்படிக்கை பேணுகிறது என அது குற்றங்கண்டுள்ளது.
அதேவேளை, கணிப்பீட்டில் அரசு சார்பற்ற ஒரு குழுமத்தை அரசே உயர்நிலைகளை வகிக்கின்றது என்ற கருத்தை அறிக்கை பரிதாபகரமாகத் தவறவிட்டுவிட்டது.யுத்த சூனிய பிரதேசத்திலுள்ள சிவிலியன்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் தொடர்பாக இராணுவம் மீது குற்றஞ்சுமத்த இந்த அறிக்கை முயலவில்லை. யுத்த சூன்யப் பிரதேசத்தில் படையினர் திருப்பிச் சுடுவதை “கொள்கைகள் சமன்பாடு” என அறிக்கை குறிப்பிடுகிறது.
வேறுவிதமாகக் கூறுவதாயின், விடுதலைப்புலிகளைத் தோற்கடிக்கும் இலட்சியத்துக்கு இத்தகைய செயற்பாடு தவிர்க்கமுடியாததொன்றே என்பதாகும். சிவிலியன்கள் கொல்லப்பட்டமை தொடர்பாக ஐந்து அம்சங்களின் சூழ்நிலைகள் குறித்து ஆராய்ந்து அறியப்படவேண்டும் என நல்லிணக்கக் ஆணைக்குழு அறிக்கை அரசுக்கு பரிந்துரை செய்கிறது.
அதேவேளை, பாதுகாப்புப் படையில் ஒருவரின் முறைகேடான நடத்தை நிரூபிக்கப்பட்டால் அவரை சட்டநடவடிக்கைக்கு உட்படுத்தி, குற்றவாளியாயின் தண்டனை வழங்கப்படவேண்டும் என்றும் கோருகிறது. இராணுவத்திடம் சரணடைந்த அநேக விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் காணாமற்போயுள்ளனர். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் அளித்துள்ள சாட்சியங்களை அடிப்படையாகக்கொண்டு விசாரணை நடத்துமாறும் ஆணைக்குழு அரசைக் கோரியுள்ளது.
“சிறிலங்கா கொலைக்களம்” ஆவணப்படத்தின் நம்பகத்தன்மை குறித்து, சந்தேகங்கள் கிளப்பியுள்ள ஆணைக்குழு, அதில் இடம்பெறும் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட பயங்கர உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு அரசைக் கோரவில்லை. இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பான உண்மை நிலைப்பாட்டையோ, பொய்மையையோ நிலைநாட்டத் தூண்டவில்லை.
சிவிலியன் பாதிப்புகள் சம்பந்தமான குழப்பநிலையைக் குறிப்பிடாமல் தவிர்த்து, மனிதநேயத்துக்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கு நட்டஈடு வழங்குமாறே அரசை ஆணைக்குழு இலங்கையின் பல் சமூக அமைப்புகளைச் சுட்டிக்காட்டியுள்ள ஆணைக்குழுவின் பரிந்துரைகள் போதுமானவையாக அமையவில்லை.
போர் தொடர்பாக இலங்கை அரசு மேற்கொள்ளும் முதல்தரச் சோதனை நடவடிக்கையாக இது இருக்கலாம். அரசு நல்லிணக்கப்பாட்டிலும், கடந்தகால படிப்பினைகளிலும் அக்கறை செலுத்துமானால், அது ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கேற்ப செயற்பட ஆரம்பிக்க வேண்டும். இப்படி அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Responses to இந்து நாளிதழுக்கும் கண் திறந்துள்ளது