Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசின் வான்தாக்குதலால் படுகொலை செய்யப்பட்ட செஞ்சோலை வளாகப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவு நாள் சுவிஸ் பேர்ன் தமிழர் இல்லத்தில், உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது.

இனவெறி சிங்கள அரச வான்படையின் திட்டமிட்ட குண்டுவீச்சுத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட மாணவச் செல்வங்களின் நினைவுகளைச் சுமந்ததும், தமிழர்களின் நெடிய வரலாற்றுப் பயணத்தில் மறக்கமுடியாத ஆறாவடுவாக மாறியதுமான வள்ளிபுனம் செஞ்சோலை வளாகப் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவு வணக்கநாள் 14.08.2013 புதன்கிழமை சுவிஸ் பேர்ன் தமிழர் இல்லத்தில்;

உணர்வுபூர்வமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் தமிழர் இல்லம் நிரம்பிய மக்கள் மிகவும் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டிருந்தனர்.



சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் செஞ்சோலை,
காந்தரூபன் அறிவுச்சோலை போன்ற இல்லங்களைத் தோற்றுவிக்க காரணியாய் இருந்த முதற் கடற்கரும்புலி மேஜர் காந்தரூபன் அவர்களுக்குரிய முதலாவது ஈகச்சுடரினைத் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்ட மாணவிகளுக்கான ஈகச்சுடர்கள் ஏற்றப்பட்டு அகவணக்கத்துடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மக்களால் மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் செஞ்சோலை சிறார்களின் நினைவு சுமந்த பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன.

நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட மாணவிகளினது நினைவுகள் சுமந்த கவிதைகளும், உரைகளும் இடம்பெற்றதைத் தொடர்ந்து தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் இனிதே நிறைவுபெற்றன.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு






0 Responses to சுவிசில் நடைபெற்ற செஞ்சோலை மாணவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com