Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சுதந்திர தமிழீழத்தை மக்கள் இதயங்களில் ஒரு நொடியில் மலர்வித்த தாய்தான் அன்னை பூபதி. அவர் ஒருவரே இந்த உலகில் நெருப்பை எரித்த நிகரில்லாத் தாய் !
அன்னை பூபதியின் மரணம் சம்பவித்தவுடன் ஏற்பட்ட அதிர்வலைகள் தமிழீழ மக்களை எல்லாம் ஒட்டு மொத்தமாகப் பாதித்தது. இந்திய அரசையும், அதன் எண்ணங்களுக்கு உட்பட்ட தீர்வையும் நிராகரித்து தமிழீழமே இனி எங்கள் தேசம் என்ற உறுதியான எண்ணத்தை மக்கள் மனதில் தூக்கிப் போட்டது.
அன்னை பூபதி கண்களை மூட, தமிழ் மக்கள் இதயக் கண்கள் அனைத்தும் ஒரு நொடி ஒற்றுமையாக அகலத் திறந்தன. ஆம் ! அந்த நொடியிலேயே கண்ணுக்குத் தெரியாத தமிழீழம் மலர்ந்து விட்டது.




அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம் மிகவும் சிறப்பாக  யேர்மனி Warendorf நகரில் நடைபெற்றது .

வணக்க நிகழ்வில் தமிழீழ தேசியக் கொடி மாவீரர் சகோதரத்தால் ஏற்றப்பட்டு ஈகைச்சுடர் , மலர்வணக்கம் ,அகவணக்கம் செலுத்தப்பட்டது .நிகழ்வில் விடுதலை பாடல்களுக்கான இளையோர்களின்  நடனங்கள் , கவிதைகள் , பேச்சுகள் என மிக சிறப்பாக நடைபெற்றது .





எமது விடுதலைப் போராட்டம் இன்றும் மிக பலமாக உள்ளது அந்த வகையில் நாம் எமது அரசியல் வேலைத்திட்டங்களை துரிதமாக முன்கர்த்தி செல்ல வேண்டும் .

மாவீரர்களுக்கான வணக்கத்தோடு நாம் நில்லாமல் அவர்கள் எந்த இலட்சியத்துக்காக போராடினார்களோ அந்த உயரிய இலட்சியத்துக்காக நாம் அனைவரும் தொடர்ந்தும் போராட வேண்டும் உறுதி எடுத்துகொண்டு கொடி இறக்க நிகழ்வோடு , நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலிக்க ,தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என முழக்கமிட்டு  வணக்க நிகழ்வு நிறைவுபெற்றது .

















தகவல்
தமிழர் ஒருங்கிணைப்புக் குழு - யேர்மனி

0 Responses to யேர்மனியில் நடைபெற்ற தியாகி அன்னை பூபதி அவர்களின் 25 ஆம் ஆண்டு நினைவு நாள் , மற்றும் நாட்டுப்பற்றாளர் தினம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com