பிரான்சு வாழ் தமிழ் மூதாளர்களால் முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்பு நாள்
மே 18 4 வது ஆண்டின் நினைவில் முன்னெடுக்கப்படும் அடையாள கவனயீர்ப்பு
போராட்டத்தின் இரண்டாம் நாள் இன்று காலை 10.00 மணிக்கு ஈகைச்சுடரினை
கபிலன் சதா ஆகிய இரு மாவீரர்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஏற்றி வைத்தார்.
அகவணக்கம் செலுத்தப்பட்டு மக்கள் பேரவை உறுப்பினரும், செயற்பாட்டாளருமாகிய திரு.பத்மநாதன் ஐயா அவர்களின் தலைமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பித்தது. வழமை போல இன்றைய நாளிலும் பல பிரெஞ்சு மக்களும், வெளிநாட்டு மக்களும் இப்போராட்டத்தை பார்த்து சென்றனர்.
துண்டு பிரசுரம் வழங்கப்பட்டு கையெழுத்துக்களும் பெறப்பட்டது. பல பாடசாலை மாணவர்களும் பார்வையிட்டு சென்றதோடு அவர்களுக்கு பொறுப்பாக வந்தவர்கள் மாணவர்களுக்கு விளக்கங்கள் கொடுத்ததையும் காணக்கூடியதாக இருந்தது. மாலை 18 மணிக்கு குளிர்பாணம் வழங்கி 2 ம் நாள் நிறைவு செய்யப்பட்டது.

0 Responses to பிரான்சு வாழ் தமிழ் மூதாளர்களால் முன்னெடுக்கப்படும் தமிழின அழிப்பு நாள் மே 18 4 வது ஆண்டின் அடையாள கவனயீர்ப்பு போராட்டத்தின் இரண்டாம் நாள்