Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிபிசியின் Top Gear கிரிஸ்துமஸ் ஸ்பெஷல் நிகழ்ச்சியில் பிரபல அறிவிப்பாளர் Jeremy Clarkson இந்தியர்களை புண்படுத்தும்

படி கேலி செய்துள்ள விவகாரம் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

இந்திய ஏழ்மை பிரதேசங்களில் காணப்படும் சுகாதாரமற்ற நிலை, சுகாதார குறைபாடு, ரயில்களில் காணப்படும் மலசல கூட வசதிகள், ஆடை வகைகள், உணவு முறைகள் என பலவற்றை கேலி செய்யும் வகையில் ஜெரெமி கிளார்க்சன் அறிவிப்பு செய்துள்ளார். இந்தியாவுக்கு செல்ல வேண்டுமாயின் ஜாகுவர் காரிலேயே இணைக்கப்பட்ட டாய்லெட் வசதியுடன் செல்வது நல்லது என உதாரணமும் காண்பித்துள்ளார்.

கடந்த புதன் கிழமை மாலை ஒளிபரப்பட்ட இந்த Top Gear நிகழ்ச்சி தொடர்பில் 23 முறைப்பாடுகள் பிபிசிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இது பிபிசியின் பேச்சாளர் தெரிவிக்கையில், ஏதும் மத குழுவினர் முறைப்பாடு செய்ய வேண்டுமாயின் நேரடியாக பிபிசிக்கு முறைப்பாடு செய்யுங்கள். நாங்கள் இதற்கு பொறுப்பேற்க முடியாது என்கிறார்.

ஏற்கனவே சில நாட்களுக்கு முன்னர் கிளார்க்சன் மற்றுமொரு சர்ச்சையில் மாட்டியிருந்தார். பொதுஇடங்களில் வேலை நிறுத்தம் செய்வோர் அவர்களது குடும்பத்தின முன்னிலையில் சுட்டுக்கொல்லப்பட வேண்டுமென்றார். பின்னர் அவர் மீது அதிகரித்திருந்த அழுத்தங்கள் காரணமாக சூழ்நிலை நிமித்தம் அவ்வாறு கூறியதற்கு மன்னிப்பு தெரிவித்திருந்தார்.

இப்போது அவர் இந்தியர்களை கேலி செய்யும் வகையில் இந்நிகழ்ச்சியில் நடந்துகொண்டுள்ள விதத்திற்கு கண்டனம் தெரிவித்து சமூக வலைத்தளங்களிலும் ஏனைய இணையத்தளங்களிலும் பிபிசிக்கு எதிராக முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக மெயில் ஆன்லைன் இணையத்தளம் தெரிவித்துள்ளது.

இந்நிகழ்ச்சியின் மற்றுமொரு சந்தர்ப்பத்தில் இரண்டு இந்தியர்களுக்கு முன்னால், ஜெரமி கிளார்க்சன் தனது நீள்காற்சட்டையை கழற்றி எப்படி Trouser Press செய்வது என்பது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் Top Gear குழுவினர் இந்திய ரயில்களில் இணைத்துள்ள பேனர்களில் "British IT is good for your company' என அச்சிடப்பட்ட வாசகங்களும், 'Eat English Muffins' என அச்சிடப்பட்ட வாசகங்களையும் பதிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தின் Boxing Day தினத்தன்று இந்திய மாணவர் அனுஜ் பித்வே சால்ஃபோர்ட்டில் படுகொலை செய்யப்பட்டு இரண்டு நாட்களில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தமிழ்மீடியா

0 Responses to இந்தியாவை கேலி செய்யும் பிபிசியின் அறிவிப்பாளர்: மீண்டுமொரு ஊடக இனவெறி தாக்குதல்?!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com