சுன்னாகத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இருந்து இரு காதல் ஜோடிகள் கிராம அலுவலர்களினால் பிடிக்கப்பட்டு சுன்னாகம் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் நேற்று புதன் கிழமை இடம்பெற்றது. சுன்னாகம் மேற்கில் உள்ள தனியார் விடுதியில் பாலியல் குற்றச்செயல்கள் இடம்பெறுவதாக கிராம அலுவலர் மற்றும் பிரதேச செயலகம் என அயலவர்களினால் முறைப்பாடுகள் அனுப்பப்பட்டு வந்தன. குறிப்பிட்ட தனியார் விடுதி பதிவு செய்யப்படாமல் இயங்கி வந்தமை தொடர்பாக பிரதேச சபையும் குறிப்பிட்ட விடுதி உரிமையாளரை அழைத்து விடுதியைப் பதிவு செய்யும் படியும் வலியுறுத்தி இருந்தது.
இந் நிலையில் நேற்று நண்பகல் கிராம அலுவலருக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறிப்பிட்ட கிராம அலுவலர் ஏனைய அயல் கிராம அலுவலர்களையும் பிரதேச சபைத் தலைவர் பொது சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரையும் இணைத்துக்கொண்டு பொலிசாரின் உதவியுடன் குறிப்பிட்ட விடுதியைச் சுற்றிவளைத்துத் தேடியபோது இரண்டு காதல் ஜோடிகள் வசமாக மாட்டிக்கொண்டார்கள். சுன்னாகம் பகுதியில் பல பதிவு செய்யப்படாத சட்டவிரேதமான விடுதிகள் இயங்கி வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கிறார்.
யாழில் காதலர்கள் ரூம் போடுவது என்பது சர்வ சாதாரணமான விடையமாகப் போய்விட்டது. இதனால் தமது வீடுகளையும் கட்டிடங்களையும் உரிமையாளர்கள் சிலர் விடுதிகளாக மாற்றி அவற்றை காதலர்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் வாடகைக்கு விட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிர்வு
பாலியல் குற்றங்கள் அதிகரிப்புக்கு காரணம் இம் மாதிரியான நடவடிக்கைகளே. பாலியல் வன்முறை வீடுகளிலேயே மறைவாக நடக்கிறது, மற்றவர்களை குற்றவாளியாக்கி அவமானப் படுத்தி அழகு பார்ப்பது நம்மவர்களுக்கு கரும்பு தின்னுவது போன்றது, இவ்வற்றாக பலியல் குற்றங்களை அம்பலமாகுவத்தால் இப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது, இதுவும் ஒரு வகை வக்கிரமே