முல்லைப்பெரியார் அணை உரிமைக்காக உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வாழ்ந்து போராட வேண்டிய இளைஞர்கள் உயிரை மாய்க்க முனைய வேண்டாம் என்று கூறியுள்ளார். சின்னமனூர் ராமமூர்த்தி தற்கொலையை அடுத்து வைகோ இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவர் மேலும், அணை பிரச்சனைக்காக ஒட்டுமொத்த தமிழகமும் கிளர்ந்து எழுந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் போக்கை கண்டித்து, தேனி அருகே சின்னமனூரைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் விஷம் குடித்தார். அவருக்கு வயது 35. இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதையடுத்து மேலும் இதுபோன்று யாரும் தற்கொலை முயற்சியில் இறங்கவேண்டாம் என்று வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Responses to உயிரை மாய்க்க வேண்டாம் : வைகோ வேண்டுகோள்