அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு சென்னை அருகே வானரகத்திரல் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி திருமண மண்டபத்தில் நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு நடந்த இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச்செயலாளரும், முதல் அமைச்சருமான ஜெயலலிதா, தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், அணிகளின் செயலாளர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்பட 250 பேர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பங்கேற்க வந்த கட்சியின் பொதுச்செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதாவை கட்சி தொண்டர்கள் வரவேற்றனர். இந்த கூட்டத்தில் மறைந்த அமைச்சர் கருப்பசாமி உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
0 Responses to ஜெவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து தீர்மானம்