சமீபத்தில் சென்னையில் தாம் சனல் 4 கின் நிருபர் எனக் கூறிய 4 பேர் அடங்கிய கும்பல் ஒன்று பலரைச் சிக்கலில் மாட்டியுள்ளது. சென்னையில் உள்ள தமிழர்களிடன் பேர்குற்றம் தொடர்பாக தாம் பேட்டி எடுப்பதாகக் கூறி இவர்கள் ஊடுருவியுள்ளனர்.
இது ஒரு பொறி என்று தெரியாத சில ஈழத் தமிழர்கள் அதில் சிக்கியுள்ளனர். அத்தோடு மட்டுமல்லாது புலிகளின் சில முக்கியஸ்தர்களும் தமது மறைவிடங்களை விட்டு வெளியே வந்து இப் போலி நபர்களுக்கு பேட்டி கொடுத்துள்ளனர். ஆனால் அவர்கள் அனைவரும் ஒன்றன் பின் ஒன்றாக தமிழ் நாடு கியூப் பிரிவுப் பொலிசாரால் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்ற விடையத்தை நீங்கள் ஏற்கனவே அறிந்திருப்பீர்கள்.
இது குறித்து சனல் 4 தொலைக்காட்சியின் கொலைக்களங்கள் தயாரிப்பாளர்கள் அதிர்வு இணையத்தோடு தொடர்புகொண்டுள்ளனர். நடந்து முடிந்த சம்பவமானது ஒரு ஏமாற்று நாடகம் என்றும் அதனை சனல் 4 தொலைக்காட்சி கடுமையாகக் கண்டிப்பதாவும் அவர்கள் கூறியுள்ளனர். இதுபோன்ற ஏமாற்றுவேலை இனியும் நடக்காமல் இருக்கவும் அதனைத் தடுக்கவும் தாம் ஒரு பிரத்தியேக தொலைபேசி இலக்கத்தை வெளியிட்டுள்ளனர் என அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். இந்தியா உட்பட எந்த நாடானாலும் எவராவது வந்து தாம் சனல் 4 க்கு வேலைசெய்வதாகத் தெரிவித்தால் இத் தொலைபேசியூடாக எவரும் தொடர்புகொண்டு குறிப்பிட்ட நபர் உண்மையாகவே சனல் 4ல் தான் வேலை செய்கிராரா என அறிய முடியும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
அத்தொலைபேசி இலக்கம்: 0044 78251 03538
குறிப்பு: இத் தொலைபேசிக்கு நீங்கள் குறுந்தகவல் அனுப்பினால் அவர்கள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
0 Responses to போலியான சனல் 4 நிருபர்கள்: தமிழர்களே ஜாக்கிரதை!