திட்டமிட்டபடி தனது இராணுவ குழுவை சீனாவுக்கு அனுப்புவதற்கு இந்தியா மீண்டும் தீர்மானித்துள்ளது.
முன்னதாக பாதுகாப்பு துறை நடவடிக்கையின் கீழ் 30 பேர் கொண்ட இந்திய இராணுவ குழு சீனா செல்லவிருந்தது.
எனினும் அக்குழுவில் இடம்பெற்றிருந்த அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இந்திய விமான படை அதிகாரி எம்.பாங்கிக்கு விசா வழங்க சீனா மறுத்துவிட்டது.
இதனால் விசனமடைந்த இந்தியா, தனது இராணுவ குழுவின் சீன விஜயத்தை இடைநிறுத்துவதாக அறிவித்தது.
அருணாச்சல பிரதேசம் தங்களுடையது என சீனா சொந்தம் கொண்டாடி வருவதுடன், அம்மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா அளிப்பதில்லை என இந்தியா கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தது. முன்னதாக 2010 இல் ஜம்மு - காஷ்மீரில் பணியிலிருந்த இந்திய கமாண்டர் ஒருவருக்கும் சீனா விசா வழங்க மறுத்திருந்தது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் இந்திய இராணுவ குழு சீனா சென்று வந்ததுடன், கடந்த மாதம் சீன இராணுவ குழு இந்தியாவுக்கு விஜயம்செய்ததை அடுத்து இரு நாடுகளிடையேயும், இவ்வாறு இராணுவ அதிகாரிகளை பாதுகாப்பு துறை நிமித்தம் அவ்வப்போது பரிமாற்றம் செய்து கொள்ள இணக்கப்பாடு எட்டப்பட்டது.
இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த இராணுவ அதிகாரிக்கு சீனா விசா வழங்க மறுப்பு தெரிவித்ததால், மீண்டும் சர்ச்சை எழுந்தது. ஆனால் இப்போது முன்னர் அறிவிக்கப்பட்டது போல் அல்லாமல், 30 பேருக்கு பதிலாக முப்படைகளை சேர்ந்த 15 பேர் மட்டும் சீனா செல்ல உள்ளதாக இந்திய தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இந்தியா திடீர் பல்டி: திட்டமிட்டபடி இராணுவ குழு சீனா செல்லும் என அறிவிப்பு
பதிந்தவர்:
ஈழப்பிரியா
08 January 2012
0 Responses to இந்தியா திடீர் பல்டி: திட்டமிட்டபடி இராணுவ குழு சீனா செல்லும் என அறிவிப்பு