நக்கீரன் அலுவலகம் மீது 2வது நாளாக அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல் நடத்தினர்.
07.01.2012 அன்று காலையில் வெளியான நக்கீரன் இதழை தமிழகம் முழுவதும் அ.தி.மு.கவினர் எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். அதே நேரத்தில், சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்தின் மீது அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் கொடூரத் தாக்குதல் நடத்தினர். சோடாபாட்டில், பாறாங்கல், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், டுவீலர்கள் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர்.
100க்கும் அதிகமான அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக்கொண்டிக்க, பாதுகாப்பு என்ற பெயரில் வந்த போலீசார் வேடிக்கை பார்த்தபடியே நின்றனர். தொடர்ந்து அணி அணியாக வந்து தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து இன்றும் (08.01.2012) நக்கீரன் அலுவலகம் மீது 2வது நாளாக அ.தி.மு.கவினர் கொடுரத் தாக்குதல் நடத்தினர். சுமார் 100க்கும் மேலானோர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினர் வீசிய கற்கள் நக்கீரன் அலுவலகத்தின் வழியே சென்ற பொதுமக்கள் மீதும் பட்டது. ஏற்கனவே பாதுகாப்பு என்ற பெயரில் வந்த போலீசார் வழக்கம்போல வேடிக்கை பார்த்தபடியே நின்றனர்.
நக்கீரன் அலுவலகம் மீது 2வது நாளாக அதிமுகவினர் தாக்குதல்! பொதுமக்கள் மீதும் கல்வீச்சு!
பதிந்தவர்:
ஈழப்பிரியா
08 January 2012
0 Responses to நக்கீரன் அலுவலகம் மீது 2வது நாளாக அதிமுகவினர் தாக்குதல்! பொதுமக்கள் மீதும் கல்வீச்சு!