முதலமைச்சர் ஜெயலலிதா மாட்டுக்கறி உண்பவர் என்பது உள்ளிட்ட பல்வேறு அவதூறு செய்திகளை வெளியிட்டுள்ளதாக நக்கீரன் பத்திரிக்கை ஆசிரியர் கோபால் மீது 6 பைரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நக்கீரன் தரப்பிலும் அ.தி.மு.க.வினர் மீது புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நக்கீரன் வார இதழில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு வெளியிடப்பட்டது. இதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினார்கள். நக்கீரன் பத்திரிகையும் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
நக்கீரன் அலுவலகம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் அலுவலக கண்ணாடிகள் உடைந்து நொறுங்கியது. அங்கிருந்த பொருட்களும் சேதம் அடைந்தன.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று அசோக் எம்.எல்.ஏ. உள்பட 300 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஜாம்பஜார் போலீஸ் நிலையத்தில் அ.தி.மு.க. பிரமுகர் அன்பு ஒரு புகார் அளித்தார்.
அதில், முதல்- அமைச்சர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட நக்கீரன் பத்திரிகை மீதும், ஆசிரியர் கோபால் மீதும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து நக்கீரன் கோபால் மீது 506 (2) (கொலை மிரட்டல்), 505 (மன உளைச்சலை ஏற்படுத்தி சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்துதல்), 504 (உயர் பதவியில் இருப்பவர்களுக்கு களங்கம் ஏற்படுத்துவது), 323 (கையால் தாக்குதல்), 148 (ஆயுதம் வைத்திருந்தல்), 147 (சட்ட விரோதமாக கூடுதல்) ஆகிய 6 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நக்கீரன் பத்திரிகை சார்பிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதன் பேரில் அசோக் எம்.எல்.ஏ. மற்றும் அ.தி.மு.க.வினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக கூடுதல், அவதூறான வார்த்தைகளால் பேசுதல், தாக்குதல் நடத்தி சேதப்படுத்துதல், ஆயுதம் வைத்திருந்தல் ஆகிய 4 சட்டப்பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
thavaraana seithi veliyidum nakkeeran gopal matrum sun tv kalanithi maran iruvarin niruvnangalaiyum udanadiyaaga thadai vendum