தென்னப்பிரிக்காவில் நடைபெறும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழாவுக்கு விடுக்கப்பட்ட அழைப்பை சிறிலங்கா அரசாங்கம் நிராகரித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் இன்று ஆரம்பமாகவுள்ள ஆபிரிக்கத் தேசிய காரங்கிரசின் நூற்றாண்டு விழாவில் 40 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இம் மாநாட்டிற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு காங்கிரசினர் அழைப்பு விடுத்திருந்தார்.
பிரி்த்தானியாவிலிருந்து இயங்கும் உலகத் தமிழர் பேரவை என்ற அமைப்பு இவ் விழாவில் பங்கேற்பதால் இந்த நிகழ்வை சிறிலங்கா அரசாங்கம் புறக்கணித்துள்ளது.
சிறிலங்கா அரசுக்கு சமமாக உலகத் தமிழர் பேரவைக்கு அதிகாரபூர்வ இடம் ஒதுக்கப்பட்டுள்ளமை சிறிலங்காவை கடும் சினத்திற்குள்ளாக்கியுள்ளது.
அதேவேளை இவ் விழாவில் பங்கேற்பதற்கு உலகத் தமிழர் பேரவையின் சார்பில் தலைவர் வண. பிதா எஸ்.ஜே.இம்மானுவெல் தலைமையிலான குழுவொன்று தென்னாபிரிக்கா சென்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா.சம்பந்தன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிறேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் பங்கு கொண்டுள்ளனர்.
ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழா உலகத் தமிழர் பேரவை
பதிந்தவர்:
ஈழப்பிரியா
08 January 2012
0 Responses to ஆபிரிக்கத் தேசிய காங்கிரசின் நூற்றாண்டு விழா உலகத் தமிழர் பேரவை