Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஹைதராபாத் குண்டுவெடிப்பு வழக்கில், இந்தியன் முகாஜீதீன் அமைப்பை சேர்ந்த இரண்டு பயங்கரவாதிகளை நான்கு நாள் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு, தேசிய புலானாய்வு அமைப்புக்கு டெல்லி நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது.

ஹைதராபாத்தில் சமீபத்தில்  நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 16 பேர் பலியாயினர். இந்த குண்டு வெடிப்பில் இந்தியன் முகாஜீதீன் அமைப்பை சேர்ந்த சையது  மக்பூல், இம்ரான் கான், ஆகிய இரண்டு பேருக்கும் தொடர்பு உள்ளது தெரிய வந்தது. புனேயில் கடந்த ஆண்டு நடந்த குண்டு வெடிப்பு வழக்கில், இவர்கள் இருவரும் ஏற்கனவே கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைகப்பட்டுளனர்.

இவர்களிடம் ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு வழக்குத் தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தியது. விசாரணையில் சில முக்கியத் தகவல்கள் தெரிய வந்துள்ளன. இதை அடுத்து இவர்களை காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தேசிய புலனாய்வு அமைப்பு டெல்லி நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது அந்த அறிக்கையில்,

ஹைதராபாத் குண்டு வெடிப்புத் தொடர்பாக இந்த இரண்டு பேரிடமும்  தனித்தனியாக நடத்திய விசாரணையில், பல முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளன. இதில் இருவரும் சில மாறுபட்ட தகவல்களை தெரிவித்தனர். இவர்கள் இருவரையும் ஒன்றாக சந்திக்க வைத்து விசாரணை நடத்தினால் மேலும் பல முக்கியத் தகவல்கள் தெரிய வரும். எனவே இவர்கள் இருவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும்.

என்று மேற்கண்டவாறு அந்த மனுவில்  கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்த மனுவை விசாரித்த டெல்லி மாவட்ட நீதி மன்ற நீதிபதி, நான்கு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்துள்ளார். அதிகாரிகள் இவர்கள் இருவரையும் ஒன்றாக வைத்து விசாரிக்க திட்டம் வைத்துள்ளனர்  என்பது குறிப்பிடத் தக்கது.

0 Responses to ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு : இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாதிகளிடம் விசாரிக்க அனுமதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com