Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கனிமொழி எம்.பி. பிறந்தநாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவுக்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் எஸ்.பி.சற்குணபாண்டியன் தலைமை தாங்கினார்.

கா.மார்ட்டின் வரவேற்று பேசினார். இந்த நிகழ்ச்சியில் எம்.பி.க்கள் டி.கே.எஸ்.இளங்கோவன், எஸ்.ஆர்.ஜெயதுரை, வி.ஜி.பி. குழுமத்தை சேர்ந்த வி.ஜி.செல்வராஜ், கராத்தே சரவணன், மாதவரம் மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் செங்கை சிவம், தி.மு.க. மகளிர் அணி துணை தலைவர் விஜயா தாயன்பன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

விழாவில் தி.மு.க. தலைவர் கருணாநிதி யின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் கலந்துகொண்டு ஆயிரம் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

அப்போது அவர், ‘’என் மகள் கலைஞர் டி.வி. வாசல்படியை கூட மிதித்தது இல்லை. ஆ.ராசாவின் அலுவலகத்திற்குகூட போகவில்லை. ஸ்பெக்ட்ரம் பற்றி ஒன்றும் தெரியாது.

திகார் சிறையில் அவர் எவ்வளவு கஷ்டங்களையும், சோதனைகளையும் சந்தித்திருக்கிறார் என்பது உங்களுக்கு எல்லாம் தெரியாது. திகார் சிறையில் ஒரு நாற்காலி கூட கிடையாது. தரையில்தான் உட்கார்ந்து இருக்கவேண்டும். படுப்பதற்கு ஒரு பாய்கூட கிடையாது. சொல்ல முடியாத அளவுக்கு பூச்சிகளால் அவதிப்பட்டார்.


சிறையில் எவ்வளவோ வேதனைப்பட்டு இருக்கிறார். அவர் கட்சிக்காகத்தான் இவ்வளவு தண்டனைகளையும், சோதனைகளையும் அனுபவித்து இருக்கிறார்’’ என்று பேசினார்.

0 Responses to என் மகள் கலைஞர் டி.வி. வாசல்படியை கூட மிதித்தது இல்லை, ராசாவின் அலுவலகத்திற்கு கூட போகவில்லை: ராஜாத்தி அம்மாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com